உலக செய்திகள்

தென் பசிபிக் கடலையொட்டி அமைந்துள்ள சாலமன் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 6.3 புள்ளிகளாக பதிவு + "||" + Powerful earthquake in the Solomon Islands located in the South Pacific - Record 6.3 points on the Richter Scale

தென் பசிபிக் கடலையொட்டி அமைந்துள்ள சாலமன் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 6.3 புள்ளிகளாக பதிவு

தென் பசிபிக் கடலையொட்டி அமைந்துள்ள சாலமன் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 6.3 புள்ளிகளாக பதிவு
தென் பசிபிக் கடலையொட்டி அமைந்துள்ள சாலமன் தீவுகளில் உள்ள கிராகிரா நகரில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.3 புள்ளிகளாக பதிவானது.

* தென்அமெரிக்க நாடான சிலியின் மத்திய பகுதியில் உள்ள அரவ்கானியா மற்றும் பியோபியோ நகரங்களில் காட்டுத்தீ கொழுந்து விட்டு எரிந்து வருகிறது. இந்த காட்டுத்தீயில் இதுவரை 4 ஆயிரம் ஏக்கர் அளவிலான நிலப்பரப்பு எரிந்து நாசமாகி உள்ளது. ஏராளமான வீடுகளும் காட்டுத்தீயால் சேதம் அடைந்த நிலையில் நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு உள்ளனர்.


* பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இருந்து ஹமாஸ் பயங்கரவாதிகள் தெற்கு இஸ்ரேல் மீது பீரங்கி குண்டுகளை வீசியதாகவும், அதற்கு பதிலடியாக அவர்களின் நிலைகளை குறிவைத்து வான்தாக்குதல் நடத்தியதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

* தென் பசிபிக் கடலையொட்டி அமைந்துள்ள சாலமன் தீவுகளில் உள்ள கிராகிரா நகரில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.3 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதவிவரங்கள் குறித்து தகவல்கள் இல்லை.

* சுலோவேனியா நாட்டின் நிதி மந்திரி ஆன்ட்ரெஜ் பெட்ரோன்கிளட்ஜ் தனது பதவியை ராஜினாமா செய்ததால் ஆளும் கட்சி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தது. இதனால் நாட்டில் புதிய தேர்தலை அறிவிக்கும் வகையில் பிரதமர் மார்ஜான் சரேக் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.