அமெரிக்காவில் ஏரியில் இருந்து இந்திய மாணவி சடலமாக மீட்பு


அமெரிக்காவில் ஏரியில் இருந்து இந்திய மாணவி சடலமாக மீட்பு
x
தினத்தந்தி 28 Jan 2020 5:28 AM GMT (Updated: 28 Jan 2020 7:32 AM GMT)

அமெரிக்காவில் காணாமல் போன இந்திய வம்சாவளி மாணவியின் உடல் அங்குள்ள பல்கலைக்கழக குளத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

வாஷிங்டன்

கேரளாவை சேர்ந்தவர் ஆன் ரோஸ் ஜெர்ரி (21). இவர் அமெரிக்காவின்  இந்தியானா மாகாணத்தில் உள்ள நோட்ரே டேம் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார். ஆன்ரோஸ் கடந்த 21-ம் தேதியில் இருந்து காணவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் கடந்த வியாழக்கிழமை ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டனர். அதில் மாணவி ஆபத்தான நிலையில் இருக்கலாம் என கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ஆன்ரோஸ் உடல் பல்கலைக்கழகத்தில் உள்ள ஏரியில்  இருந்து மீட்கப்பட்டுள்ளது. அவர் உடலில் காயங்கள் ஏதுமில்லாததால் இது ஒரு விபத்து என்றே போலீசார் கருதுகின்றனர். இசையின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட ஆன்ரோஸ் பியானோ வாசிப்பதில் சிறந்து விளங்கியதோடு மிகவும் புத்திசாலியான மாணவி என்றும் பெயரெடுத்தவர். அவரது மரணம் சக மாணவர்களை அதிர்ச்சிக்கும் சோகத்துக்கும் ஆளாக்கியுள்ளது. இதனிடையில் ஆன்ரோஸ் ஒரு புத்திசாலித்தனமான பெண்ணாவார். அவர்  குடும்பத்தாருக்காக பிரார்த்தனை செய்கிறோம் என பல்கலைக்கழகம் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story