உலக செய்திகள்

அல்ஜீரியாவில் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியது: 2 விமானிகள் பலி + "||" + Army plane crashes in Algeria: 2 pilots killed

அல்ஜீரியாவில் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியது: 2 விமானிகள் பலி

அல்ஜீரியாவில் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியது: 2 விமானிகள் பலி
அல்ஜீரியாவில் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் சிக்கி 2 விமானிகள் பலியாயினர்.
அல்ஜியர்ஸ்,

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான அல்ஜீரியாவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள அவும் அல் புவாஹி மாகாணத்தில் இருக்கும் ராணுவ விமான தளத்தில் இருந்து சுகோய் சூ-30 ரக ராணுவ விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் 2 விமானிகள் இருந்தனர்.


புறப்பட்டு சென்ற சில நிமிடங்களில் விமான தளத்துக்கு அருகிலேயே விமானம் திடீரென விழுந்து நொறுங்கியது. இந்த கோர விபத்தில் விமானிகள் 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. எனினும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்து நேரிட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கடந்த 2018-ம் ஆண்டு தலைநகர் அல்ஜியர்சில் உள்ள ராணுவ விமான நிலையத்தில் இருந்து ராணுவவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் புறப்பட்டு சென்ற ராணுவ விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில் விழுந்து நொறுங்கி விமானத்தில் இருந்த 257 பேரும் பலியானது நினைவுகூரத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. கொடைக்கானல் அருகே மின்கம்பத்தில் கார் மோதி விபத்து கேரள தம்பதிகள் உயிர் தப்பினர்
கொடைக்கானல் அருகே மின்கம்பத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கேரள தம்பதிகள் உயிர் தப்பினர்.
2. பஸ், ஆட்டோ கிணற்றுக்குள் பாய்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு: பிரதமர் மோடி இரங்கல்
பஸ், ஆட்டோ கிணற்றுக்குள் பாய்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 26 ஆக உயர்ந்தது. பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார்.
3. டெல்லியில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து: 4 மாணவர்கள் உள்பட 5 பேர் பலி; 13 பேர் காயம்
டெல்லியில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி 4 மாணவர்கள் உள்பட 5 பேர் பலியாயினர். மேலும் 13 பேர் காயமடைந்துள்ளனர்.
4. பெரு நாட்டில் பேருந்து விபத்து: 6 பேர் பலி; 37 பேர் காயம்
பெரு நாட்டில் பேருந்து விபத்தில் 6 பேர் பலியாகி உள்ளனர்.
5. கள்ளக்குறிச்சியில் கார், அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதல்; 4 பேர் பலி
கள்ளக்குறிச்சியில் கார் மற்றும் அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதியதில் நான்கு பேர் பலியாகி உள்ளனர்.