உலக செய்திகள்

அமெரிக்காவில் படகு வீடுகளில் தீப்பிடித்து 8 பேர் சாவு + "||" + 8 die in boat fires in US

அமெரிக்காவில் படகு வீடுகளில் தீப்பிடித்து 8 பேர் சாவு

அமெரிக்காவில் படகு வீடுகளில் தீப்பிடித்து 8 பேர் சாவு
அமெரிக்காவில் படகு வீடுகளில் தீப்பிடித்து விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர்.
வாஷிங்டன்,

அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் உள்ள ஸ்காட்ஸ்போரோ நகரில் டென்னசி நதி கரையோரம் மரத்திலான படகு வீடுகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த படகு வீடுகளில் பொதுமக்கள் பலர் நிரந்தரமாகவும் சிலர் வார இறுதி நாட்களை கழிக்கும் பொருட்டும் வாடகைக்கு தங்கியிருந்தனர்.


இந்த நிலையில் நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 12.40 மணிக்கு இங்குள்ள ஒரு படகு வீட்டில் திடீரென தீப்பிடித்தது. காற்றின் வேகம் காரணமாக மற்ற படகு வீடுகளுக்கும் தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.

இந்த விபத்தில் 35 படகு வீடுகள் எரிந்து ஆற்றில் மூழ்கின. அதில் இருந்த குழந்தைகள், பெண்கள் உள்பட 8 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். அதே சமயம் படகு வீடுகளில் இருந்த 7 பேர் ஆற்றில் குதித்து உயிர் தப்பினர். அவர்களை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

தீவிபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சேலத்தில் பரபரப்பு ஓடும் பஸ்சில் பயங்கர தீ 60 பயணிகள் உயிர் தப்பினர்
சேலத்தில் ஓடும் பஸ்சில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக 60 பயணிகள் உயிர் தப்பினர். இதனால் நேற்று காலை சேலத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
2. வடசேரி சந்தையில் 3 கடைகள் தீயில் எரிந்து நாசம்
நாகர்கோவில் வடசேரி சந்தையில் 3 கடைகள் தீயில் எரிந்து நாசமாகின. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
3. ஓமலூர் அருகே தென்னை நார் தொழிற்சாலையில் தீ; பொருட்கள் எரிந்து நாசம்
ஓமலூர் அருகே தென்னை நார் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின.
4. அமெரிக்காவில் தீயில் இருந்து குடும்பத்தினர் 7 பேரை காப்பாற்றிய சிறுவன்
அமெரிக்காவில் 5 வயது சிறுவன் தனது குடும்ப உறுப்பினர்களை தீவிபத்தில் இருந்து காப்பாற்றிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
5. அமெரிக்காவுக்கு ஈரான் பகிரங்க மிரட்டல் - ‘சிறிய தவறு செய்தாலும் தாக்குதல் நடத்துவோம்’
சிறிய தவறு செய்தாலும் தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்காவுக்கு ஈரான் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது.