ஜப்பானின் ஒகினாவா பிராந்தியத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 5.4 புள்ளிகளாக பதிவு


ஜப்பானின் ஒகினாவா பிராந்தியத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 5.4 புள்ளிகளாக பதிவு
x
தினத்தந்தி 29 Jan 2020 10:38 PM GMT (Updated: 29 Jan 2020 10:38 PM GMT)

ஜப்பானின் ஒகினாவா பிராந்தியத்தில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.4 புள்ளிகளாக பதிவானது.


* ஜப்பானின் ஒகினாவா பிராந்தியத்தில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.4 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல்கள் இல்லை.

* இந்தோனேசியாவின் சுமத்ரா மாகாணத்தில் இடைவிடாது கனமழை கொட்டி வருகிறது. இதனால் அங்குள்ள பல்வேறு நகரங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. வெள்ளத்தில் சிக்கி இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். 3 பேர் மாயமாகி உள்ளனர்.

* மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான புர்கினோ பாசோவில் சவும் மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்துக்குள் பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் 40 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.

* பிரேசிலில் மினாஸ் கிரியாஸ் மற்றும் ரியோ டீ ஜெனிரோ மாகாணங்களில் கனமழை மற்றும் வெள்ளம் பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது.

Next Story