உலக செய்திகள்

பாகிஸ்தானில் வீடு இடிந்து விழுந்து 7 சிறுவர்கள் பலி + "||" + 7 killed, 5 injured in house roof collapse in Pakistan

பாகிஸ்தானில் வீடு இடிந்து விழுந்து 7 சிறுவர்கள் பலி

பாகிஸ்தானில் வீடு இடிந்து விழுந்து 7 சிறுவர்கள் பலி
பாகிஸ்தானில் கைபர் பக்துங்வா மாகாணத்தில் உள்ள பஜாவூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை கொட்டி வருகிறது.
இஸ்லாமாபாத், 

பாகிஸ்தானில் கைபர் பக்துங்வா மாகாணத்தில் உள்ள பஜாவூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை கொட்டி வருகிறது. இந்த தொடர் மழை காரணமாக அங்குள்ள பழமையான வீடு ஒன்று இடிந்து விழுந்தது. இதில் அந்த வீட்டில் இருந்த ஒரு பெண் மற்றும் 11 சிறுவர்கள் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீவிர மீட்பு பணியில் இறங்கினர். எனினும் 7 சிறுவர்களை பிணமாகத்தான் மீட்க முடிந்தது. அவர்கள் அனைவரும் 14 வயதுக்கு உட்பட்டவர்கள். மேலும் ஒரு பெண் மற்றும் 4 சிறுவர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 2 சிறுவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.