கொரோனா வைரஸ் எதிரொலி: வங்காளதேசத்தினர் 300 பேர் தாயகம் திரும்பினர்


கொரோனா வைரஸ் எதிரொலி: வங்காளதேசத்தினர் 300 பேர் தாயகம் திரும்பினர்
x
தினத்தந்தி 1 Feb 2020 10:47 PM GMT (Updated: 1 Feb 2020 10:47 PM GMT)

சீனாவில் கொரோனா வைரஸ் எதிரொலியால், அங்கு உகான் நகரில் வசித்து வந்த வங்காளதேசத்தினர் 300 பேர் நேற்று விமானம் மூலம் டாக்காவுக்கு திரும்பினர்.


* காசா முனையில் இருந்து ராக்கெட் வீசப்பட்டதால், பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் போராளிகள் இயக்கத்தின் நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் வான்தாக்குதல் நடத்தி உள்ளது. இதன் சேத விவரங்கள் தெரிய வரவில்லை.

* ஈராக் நாட்டின் அல்கொய்தா பிரிவு தலைவர் என கூறப்படுகிற அலி யூசுப் அகமது அல்நூரி (வயது 42), அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் பீனிக்ஸ் நகரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

* சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால், அங்கு உகான் நகரில் வசித்து வந்த வங்காளதேசத்தினர் 300 பேர் நேற்று டாக்காவுக்கு விமானம் மூலம் திரும்பினர்.

* ஆஸ்திரேலியாவின் தலைநகர் கான்பெர்ராவில் காட்டுத்தீ பரவி வருவதால் 35 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பு காடுகள் எரிந்து வீணாகி உள்ளன. இந்த தீ காரணமாக அங்கு ஒரு நெடுஞ்சாலை மூடப்பட்டது. மேலும், அந்தப் பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான புகலிடம் தேடிக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Next Story