உலக செய்திகள்

தென் கிழக்கு தான்சானியாவில் வெள்ளப்பெருக்கு : 20 பேர் பலி + "||" + Floods in southeast Tanzania leave 21 people dead

தென் கிழக்கு தான்சானியாவில் வெள்ளப்பெருக்கு : 20 பேர் பலி

தென் கிழக்கு தான்சானியாவில் வெள்ளப்பெருக்கு : 20 பேர் பலி
தென் கிழக்கு தான்சானியாவில் பெய்து வரும் கன மழை மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
லிண்டி, 

தென் கிழக்கு  தான்சானியா நாட்டில் உள்ள லிண்டி மாகாணத்தில் கன மழை பெய்து வருகிறது. இந்த மழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள சாலைகளும், வீடுகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

இதனால் அங்குள்ள மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வெள்ளத்தில் சிக்கி 21 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 15,000 மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.

அதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்கள் மூலம் பாதிக்கப்பட்ட தான்சானியா பகுதி மக்களுக்கு அந்நாட்டு இராணுவம் உதவிகளை செய்து வருகிறது. பெய்து வரும் கனமழையால் உள்ளூர் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகின்றது. 

தொடர்புடைய செய்திகள்

1. உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கு: 68 உடல்கள் இதுவரை மீட்பு
உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்களில் இன்னும் 136- பேரை கண்டறியும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
2. உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கு: மேலும் 5 உடல்கள் மீட்பு: மொத்த எண்ணிக்கை 67 ஆக உயர்வு
உத்தரகாண்ட் சாமோலி பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்த 67 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
3. உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்த 62 பேரின் உடல்கள் மீட்பு
உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்த 62 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
4. உத்தரகாண்ட் வெள்ளப் பெருக்கில் சிக்கி 10 பேர் உயிரிழப்பு: அமெரிக்கா இரங்கல்
வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.
5. நெல்லை தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: சேதம் அடைந்த இடங்களில் அமைச்சர்கள் ஆய்வு
நெல்லை தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையொட்டி சேதம் அடைந்த இடங்களை, அமைச்சர்கள் உதயகுமார், கடம்பூர் ராஜூ, ராஜலட்சுமி ஆகியோர் ஆய்வு செய்தனர்.