6 துருக்கி வீரர்கள் கொலை: தகுந்த பதிலடி தருவோம் சிரியாவுக்கு துருக்கி எச்சரிக்கை


6 துருக்கி வீரர்கள் கொலை: தகுந்த பதிலடி தருவோம் சிரியாவுக்கு துருக்கி எச்சரிக்கை
x
தினத்தந்தி 4 Feb 2020 10:37 AM GMT (Updated: 4 Feb 2020 12:41 PM GMT)

6 துருக்கி வீரர்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து தகுந்த பதிலடி தருவோம் என சிரியாவுக்கு துருக்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.

கியே

ரஷ்யா ஆதரிக்கும் சிரியாவின் அரசுப்படை இட்லிப் நகரில் நடத்திய தாக்குதலில் 6 துருக்கி வீரர்கள் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் துருக்கி-சிரியா இடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் கியேவில் இது குறித்து பேசிய துருக்கி அதிபர்  எர்டோகன் கூறியதாவது:-

துரதிர்ஷ்டவசமாக, நாட்கள் கடந்தும் இட்லிப் நகரின் நிலைமை ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை.துருக்கி மிகவும் பொறுமையாக இருந்து வருகிறது. 30 முதல் 40 லட்சம் மக்கள் வாழும் இட்லிப் நகரில் ரஷ்யா ஆதரிக்கும் சிரியா அரசுப்படை நடத்திய தாக்குதலால், அங்கிருந்த மக்கள் தற்போது துருக்கி எல்லையை நோக்கி வந்துகொண்டிருக்கின்றனர்.

சமீபத்திய மதிப்பீட்டின் படி இட்லிப் நகரத்திலிருந்து தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் துருக்கி எல்லையை நோக்கி வந்துகொண்டிருக்கின்றனர். இட்லிப் நகரில்  சிரிய அரசு இராணுவப் படை நடத்திய தாக்குதலில் துருக்கி இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு வான்வெளி மற்றும் தரை தாக்குதல்களின் மூலம் கடும்  பதிலடியை நாங்கள் தருவோம்.

சிரியா அமைதி செயல்பாட்டின் ஒரு பகுதியாக போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி தங்களின் பொறுப்பு என்னவென்று எல்லோரும் உணருவார்கள் என நம்புகிறோம். அதன் படி துருக்கி தொடர்ந்து செயல்படும் என எர்டோகன் தெரிவித்துள்ளார்.

Next Story