அமெரிக்காவில் பியூர்டோ ரிகோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 5.0 புள்ளிகளாக பதிவு .


அமெரிக்காவில் பியூர்டோ ரிகோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 5.0 புள்ளிகளாக பதிவு .
x
தினத்தந்தி 5 Feb 2020 11:20 PM GMT (Updated: 5 Feb 2020 11:20 PM GMT)

அமெரிக்காவில் உள்ள தன்னாட்சி பிராந்தியமான பியூர்டோ ரிகோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.0 புள்ளிகளாக பதிவானது.


* சிரியாவின் வடக்கு பகுதியில் துருக்கி ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் இருந்து சிரிய படைகளை அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று துருக்கி அதிபர் தயீப் எர்டோகன் வலியுறுத்தி உள்ளார். ஒருவேளை சிரிய படைகள் பின்வாங்கவில்லை என்றால், இந்த விவகாரத்தை துருக்கி தனது கையில் எடுக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

* அமெரிக்காவில் உள்ள தன்னாட்சி பிராந்தியமான பியூர்டோ ரிகோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.0 புள்ளிகளாக பதிவானது. எனினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல்கள் இல்லை.

* சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் பிறநாடுகளில் வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில் மலேசியா மற்றும் பெல்ஜியத்தில் தலா ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதற்கிடையே இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் சீனாவில் இருக்கும் தங்கள் நாட்டு மக்களை உடனடியாக வெளியேறும் படி வலியுறுத்தி உள்ளன.

* சிரியாவின் வடக்கு பகுதியில் உள்ள இத்லிப் மாகாணத்தில் கிளர்ச்சியாளர்களுக்கும், அரசு படைகளுக்கும் இடையே உச்சக்கட்ட மோதல் நடந்து வருகிறது. இதில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த விவகாரம் குறித்து ஆலோசித்து தீர்வுகான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை நடத்த வேண்டுமென அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் வலியுறுத்தி உள்ளன.

Next Story