கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் : டிரம்ப்- ஜி ஜின்பிங் ஆலோசனை


கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் : டிரம்ப்- ஜி ஜின்பிங் ஆலோசனை
x
தினத்தந்தி 7 Feb 2020 5:32 AM GMT (Updated: 7 Feb 2020 5:43 AM GMT)

கொரோனோ வைரஸ் தொற்று உலகை அச்சுறுத்தி வரும் நிலையில், இவ்விவகாரம் குறித்து டிரம்புடன் ஜி ஜின்பிங் ஆலோசனை நடத்தியுள்ளார்.

பெய்ஜிங்,

நாவல் கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள சூழலில், சீன அதிபர் ஜி ஜின்பிங்  அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.  தொலைபேசியில் டிரம்புடன் பேசிய ஜி ஜின்பிங்,  கொரோனா வைரஸ் தொற்றை முற்றிலும் ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கையும் திறனும் சீனாவிடம் உள்ளது எனத் தெரிவித்ததாக  சீன அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.  மேலும், இந்த கொடிய வைரஸ் தொற்றை எதிர்த்து போராடுவதில் எந்த ஒரு முயற்சியையும் சீனா விட்டு வைக்காது எனவும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கடந்த சில தினங்களுக்கு முன்  அமெரிக்காவின் மாகாண கூட்டு கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், கொரோனா வைரஸை ஒழிக்க சீனாவுடன் இணைந்து  போராட அமெரிக்கா தயாராக உள்ளது என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், வைரஸ் பாதிப்புக்கு ஆளான அனைவருக்காகவும் கடவுளை  பிரார்த்திக்கிறேன் என்றும் மருத்துவத்துறையில் அமெரிக்கா சாதித்து வருவது எல்லோரும் அறிந்த ஒன்றே என்றும் தெரிவித்து இருந்தது நினைவுகூரத்தக்கது. 

Next Story