சீன வங்கிகளிடம் வாங்கிய கடன் வழக்கு ; ரூ.715 கோடி தர அனில் அம்பானிக்கு நீதிமன்றம் உத்தரவு


சீன வங்கிகளிடம் வாங்கிய கடன் வழக்கு ; ரூ.715 கோடி தர அனில் அம்பானிக்கு நீதிமன்றம் உத்தரவு
x
தினத்தந்தி 8 Feb 2020 3:19 AM GMT (Updated: 8 Feb 2020 3:43 AM GMT)

உலகின் 6-வது மிகப்பெரிய பணக்காரராக முன்பு இருந்த அனில் அம்பானி, தற்போது தனது நிகர மதிப்பு பூஜ்ஜியம் என லண்டன் நீதிமன்றத்தில் வாதாடியுள்ளார்.

லண்டன்,

சீன வங்கிகளிடம் வாங்கிய கடனை திருப்பி தராததால், ரிலையன்ஸ் குழு தலைவர் அனில் அம்பானி, 715 கோடி ரூபாய் வழங்க  வேண்டும் என்று லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சீன வங்கிகளிடம் அனில் அம்பானி, வாங்கிய கடனை திருப்பித் தராததால், அவர் மீது லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கை விசாரித்த லண்டன் நீதிமன்றம், கடனை திருப்பித் தராததால் 715 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக அனில்  அம்பானி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த வழக்கு விசாரணையின் போது,   அனில் அம்பானி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே, அனில் அம்பானி தற்போது பணக்காரர் இல்லை என்று வாதிட்டார். மேலும்,  அனில் அம்பானி, ஒரு காலத்தில் மாபெரும் பணக்காரரராக இருந்தார். ஆனால், தற்போது அப்படியில்லை. அவரது கடன்களை கணக்கிட்டால், அவருடைய நிகர மதிப்பு, பூஜ்யம்தான் என்றார். 

Next Story