உலக செய்திகள்

கொரோனா வைரஸ் பாதிப்பு: சர்வதேச மருத்துவ நிபுணர்கள் குழு சீனா வருகிறது + "||" + WHO coming to Beijing to form expert team on virus

கொரோனா வைரஸ் பாதிப்பு: சர்வதேச மருத்துவ நிபுணர்கள் குழு சீனா வருகிறது

கொரோனா வைரஸ் பாதிப்பு: சர்வதேச மருத்துவ நிபுணர்கள் குழு சீனா வருகிறது
சீனாவில் பரவி வரும் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு மருத்துவக் குழுவை அனுப்பி உள்ளது.
பீஜிங்,

சீனாவின் ஹுபெய் மாகாணம் உகானில் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்குதல் பல்வேறு நாடுகளுக்கும் பரவியுள்ளது. சீனாவில் இந்த தாக்குதலுக்கு இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 908 ஆக உயர்ந்துள்ளது. 

இதுவரை 40,171 பேருக்கு இந்த வைரஸ் தாக்குதல் உறுதியாகி உள்ளது.  1.87 லட்சம் போ தொடா்ந்து மருத்து கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். உலகளவில் 40,600-க்கும் மேற்பட்டோா் பாதிப்படைந்துள்ளனா்.  கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களின் உயிரை காப்பாற்றுவதற்காக டாக்டர்கள் போராடி வருகின்றனா்.

இந்நிலையில்,   சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு வருவதை கட்டுப்படுத்த உலக சுகாதார அமைப்பின் தலைமையில் சர்வதேச மருத்துவ நிபுணர்கள் குழு ஒன்று இன்று இரவு சீனா வர உள்ளது. 

இந்த குழுவினர் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் பணியில் சீன அதிகாரிகளுக்கு உதவியாக பணியாற்றுவார்கள். முந்தைய பொது சுகாதார அவசரநிலை காலங்களில் பணியாற்றிய மூத்த நிபுணர் புரூஸ் அய்ல்வார்டு இந்த குழுவுக்கு தலைமை தாங்கி உள்ளார்.

கடந்த 4 நாட்களாக கொரோனா வைரஸ் தாக்குதல் உறுதியான நோயாளிகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கி உள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஹைட்ராக்ஸி குளோரோகுயினை கொரோனா சிகிச்சைக்கு மிரட்டி வாங்கும் டிரம்புக்கு எதிராக விமர்சனம்
மலேரியா மருந்து ஹைட்ராக்ஸி குளோரோகுயினை கொரோனா சிகிச்சைக்கு மிரட்டி வாங்கும் நோக்கம் என்ன? டொனால்டு டிரம்புக்கு எதிராக அமெரிக்காவில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
2. கொரோனா வைரஸ் பாதிப்புக்கு நிதி : சோனியா காந்தி ஐந்து பரிந்துரைகளுடன் பிரதமர் மோடிக்கு கடிதம்
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு நிதி நெருக்கடியை சமாளிக்க சோனியா காந்தி ஐந்து பரிந்துரைகளுடன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.
3. அறிகுறியே இல்லை, ஆனால் வைரஸ் பாதிப்பு... டாக்டர்களை குழப்பும் கொரோனா
அறிகுறியே இல்லாமல் கொரோனா நோய் திடீர் என தோன்றி டாக்டர்களை கொரோனா வைரஸ் குழப்பி வருகிறது.
4. உணவு தானியங்கள், காய்கறிகள், பழங்கள் உற்பத்தி செய்கின்ற விவசாயிகளுக்கு புதியதிட்டங்கள்- முதல்வர் பழனிசாமி
உணவு தானியங்கள், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை உற்பத்தி செய்கின்ற விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு திட்டங்களை அறிவித்து உள்ளார்.
5. பில்கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் இன்று கொரோனா தடுப்பூசி பரிசோதனை
பில்கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் இன்று கொரோனா தடுப்பூசி பரிசோதனை தொடங்கப்பட்டு உள்ளது.