உலக செய்திகள்

நியூயார்க் நகரில் இருந்து லண்டனுக்கு 5 மணி நேரத்துக்குள் சென்று பயணிகள் விமானம் சாதனை + "||" + British Airways completes flight from New York to London in under 5 hours, breaks speed record

நியூயார்க் நகரில் இருந்து லண்டனுக்கு 5 மணி நேரத்துக்குள் சென்று பயணிகள் விமானம் சாதனை

நியூயார்க் நகரில் இருந்து லண்டனுக்கு 5 மணி நேரத்துக்குள் சென்று பயணிகள் விமானம் சாதனை
நியூயார்க் நகரில் இருந்து லண்டனுக்கு 5 மணி நேரத்துக்குள் சென்று பயணிகள் விமானம் சாதனை படைத்துள்ளது.
லண்டன், 

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகரம் வரையிலான தூரத்தை கடக்க விமான பயண நேரம் சராசரியாக 6 மணிநேரம் 13 நிமிடங்கள் ஆகும்.

இந்த நிலையில் பிரிட்டிஸ் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 747 ரக பயணிகள் விமானம் இந்த தூரத்தை 5 மணி நேரத்துக்குள்ளாக கடந்து சாதனை படைத்துள்ளது.

இந்த விமானம், நேற்று முன்தினம் காலை நியூயார்க்கில் உள்ள கென்னடி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு  4 மணிநேரம் 56 நிமிடங்களில் பயண தூரத்தை கடந்து லண்டன் விமான நிலையத்திற்கு சென்றடைந்தது.

இதன்மூலம் அட்லான்டி பயண தூர பகுதியை 5 மணிநேரத்துக்குள்ளாக கடந்த முதல் பயணிகள் விமானம் எனும் சாதனையை படைத்தது. முன்னதாக நார்வே விமானம் இந்த பயண தூரத்தை 5 மணிநேரம் 13 நிமிடங்களில் கடந்தது சாதனையாக இருந்தது.

தொடர்புடைய செய்திகள்

1. லண்டனுக்கு சிகிச்சைக்காக சென்ற நவாஸ் ஷெரீப் உடல்நிலையில் இம்ரான்கான் சந்தேகம்
லண்டனுக்கு சிகிச்சைக்காக சென்ற நவாஸ் ஷெரீப் உடல்நிலையில் பிரதமர் இம்ரான்கான் சந்தேகம் எழுப்பி உள்ளார்.
2. லண்டனில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட 39 பேரில் 20 பேர் வியட்நாமைச் சேர்ந்தவர்கள் என தகவல்
லண்டனில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட 39 பேரில் 20 பேர் வியட்நாமைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
3. இங்கிலாந்தில் பரபரப்பு: கன்டெய்னர் லாரியில் 39 உடல்கள் கண்டெடுப்பு
இங்கிலாந்தில் கன்டெய்னர் லாரியில் 39 உடல்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
4. லண்டனில் 10 ஆண்டுகளுக்கு முன் பெண் கற்பழித்து கொலை: இந்திய கைதி, இங்கிலாந்துக்கு நாடு கடத்தல்
லண்டனில் 10 ஆண்டுகளுக்கு முன் பெண் கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில், இந்திய கைதி ஒருவர் இங்கிலாந்துக்கு நாடு கடத்தப்பட்டார்.
5. இம்ரான்கான் சென்ற விமானத்தில் கோளாறு: மீண்டும் நியூயார்க் திரும்பினார்
இம்ரான்கான் சென்ற விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் மீண்டும் நியூயார்க் நகரத்திற்கே திரும்பினார்.