உலக செய்திகள்

மைக்ரோசாப்ட்டுக்கு ஒப்பந்தம் வழங்கியதில் முறைகேடா? - டிரம்பை விசாரிக்க ‘அமேசான்’ கோரிக்கை + "||" + Was Microsoft's contract illegal? - Amazon request to investigate Trump

மைக்ரோசாப்ட்டுக்கு ஒப்பந்தம் வழங்கியதில் முறைகேடா? - டிரம்பை விசாரிக்க ‘அமேசான்’ கோரிக்கை

மைக்ரோசாப்ட்டுக்கு ஒப்பந்தம் வழங்கியதில் முறைகேடா? - டிரம்பை விசாரிக்க ‘அமேசான்’ கோரிக்கை
மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கியது தொடர்பாக டிரம்பை விசாரிக்க ‘அமேசான்’ கோரிக்கை விடுத்துள்ளது.
வாஷிங்டன், 

அமெரிக்க ராணுவத்தின் தலைமையகமான பென்டகனை டிஜிட்டல் மயமாக்கும் 10 பில்லியன் டாலருக்கான (இந்திய மதிப்பில் ரூ.71 ஆயிரம் கோடி) ஒப்பந்தம் பிரபல பன்னாட்டு நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.

முன்னதாக இந்த ஒப்பந்தத்தை பெற அமேசான் நிறுவனமும் விண்ணப்பித்திருந்த நிலையில், மைக்ரோசாப்ட்டுக்கு பென்டகன் ஒப்பந்தத்தை வழங்கியது. இதனால் கோபம் அடைந்த அமேசான் நிறுவனம் ஒப்பந்தத்தை ஒதுக்கீடு செய்வதில் முறைகேடு நடந்ததாக கூறி பென்டகன் மீது வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு வாஷிங்டன் நகர கோர்ட்டில் விசாரணைக்கு உள்ளது.

இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக அமேசான் நிறுவனம் புதிய மனு ஒன்றை கோர்ட்டில் தாக்கல் செய்தது. இந்த மனுவில், ஒப்பந்தத்தை ஒதுக்குவதில் தங்களை புறக்கணித்து விட்டு, மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு ஆதரவாக ஜனாதிபதி டிரம்ப் செயல்பட்டார் என அமேசான் நிறுவனம் குற்றம் சாட்டி உள்ளது.

மேலும், ஒப்பந்த நடைமுறையில் டிரம்ப் தனிப்பட்ட முறையில் தனது அதிகாரத்தை பயன்படுத்தியதாகவும், அமேசானை ஒழித்துக்கட்ட அவர் உத்தரவிட்டதை தாங்கள் கண்டுபிடித்துள்ளதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே இந்த விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி டிரம்ப், முன்னாள் ராணுவ மந்திரி ஜேம்ஸ் மாட்டிஸ், தற்போதைய ராணுவ மந்திரி மார்க் எஸ்பர் ஆகியோரிடம் விசாரணை நடத்த வேண்டுமென இந்த மனுவில் அமேசான் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. நியூசிலாந்து அணியின் ஒப்பந்தத்தில் கைல் ஜாமிசன், டேவோன் கான்வே ஆகியோருக்கு இடம்
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் ஒப்பந்தத்தில் கைல் ஜாமிசன், டேவோன் கான்வே ஆகியோருக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது.
2. நிவாரண பொருட்கள் வழங்குவதில் முறைகேடு: ரேஷன் கடையை முற்றுகையிட்ட பொதுமக்கள்
நிவாரண பொருட்கள் வழங்குவதில் முறைகேடு நடப்பதாக கூறி ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
3. தலீபான்களுடனான ஒப்பந்தம்: ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வாபஸ் தொடங்கியது
தலீபான்களுடனான ஒப்பந்தப்படி ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வாபஸ் தொடங்கியது.
4. 2018-ல் நடந்த ‘நீட்’ தேர்விலும் முறைகேடு அம்பலம்: சென்னை மருத்துவக்கல்லூரி மாணவரிடம் விசாரணை - சி.பி.சி.ஐ.டி போலீசார் புதிய வழக்குப்பதிவு
2018-ல் நடந்த ‘நீட்’ தேர்விலும் முறைகேடு நடந்ததாக வந்த புகாரின் பேரில் சி.பி.சி.ஐ.டி போலீசார் புதிய வழக்கு ஒன்றை பதிவு செய்து உள்ளனர். இது தொடர்பாக சென்னை மருத்துவக்கல்லூரி மாணவரிடம் விசாரணை நடக்கிறது.
5. அரூர் அரசு பள்ளியில் சத்துணவில் முறைகேடு செய்த அமைப்பாளர் பணி இடைநீக்கம்
அரூர் அரசு பள்ளியில் சத்துணவில் முறைகேடு செய்த அமைப்பாளர் பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்யப்பட்டார்.