உலக செய்திகள்

கொரோனா வைரஸ் பாதிப்பால் ஜப்பானில் ஒருவர் உயிரிழப்பு + "||" + Japan confirms its first death from the coronavirus

கொரோனா வைரஸ் பாதிப்பால் ஜப்பானில் ஒருவர் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பால் ஜப்பானில் ஒருவர் உயிரிழப்பு
ஜப்பான் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
டோக்கியோ,

சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் உகானில் இருந்து கடந்த டிசம்பர் மாத இறுதியில் கொரோனா வைரஸ் பரவியது.  இதன்பின்னர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் என நாடு முழுவதும் பரவியது.  இதனால் தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. கொரோனா வைரஸ் பாதிப்பினால் இதுவரை பலி எண்ணிக்கை 1,350ஐ கடந்துள்ளது. 

சீனா, மலேசியா, தைவான், ஜப்பான், கொரியா போன்ற நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரசுக்கான தடுப்பூசியை கண்டறியும் முயற்சியில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் ஈடுபட்டுள்ளன.

இந்தநிலையில்  ஜப்பான் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 80 வயது மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார் என்றும்,  கொரோனா வைரஸ் பாதிப்பால் முதல் மரணம் பதிவாகியிருப்பதாக ஜப்பான் அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரசால் உயிரிழந்த மூதாட்டியின் பெயர் மற்றும் புகைப்படத்தை வெளியிட அந்நாட்டு அரசு மறுத்து விட்டது.

உயிரிழந்த மூதாட்டி டோக்கியாவில் இருந்து தெற்கே உள்ள கனகவா மாகாணத்தில் வசித்து வந்தவர் என்பது தெரியவந்துள்ளது. கொரோனா வைரசால் உயிரிழந்த மூதாட்டி சீனா சென்று வந்த எந்த தகவலும் பதிவாகவில்லை என அந்நாட்டு சுகாதார துறை மந்திரி கட்சுனோபு கட்டோ
தெரிவித்துள்ளார்.

ஜப்பான் நாட்டு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள டைமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் மொத்தம் 174 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று இருப்பதாக அந்நாட்டு சுகாதார துறை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா அச்சுறுத்தல் குறித்து, முன்னணி விளையாட்டு வீரர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
கொரோனா அச்சுறுத்தல் குறித்து, முன்னணி விளையாட்டு வீரர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
2. கொரோனா வைரஸ் பாதிப்பு- நடிகர்-நடிகைகள் சம்பளத்தில் 30 சதவீதம் குறைப்பு?
தயாரிப்பாளர்கள் நஷ்டத்தை ஈடுகட்ட நடிகர்-நடிகைகள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் வற்புறுத்தி உள்ளார்.
3. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,301 ஆக உயர்வு
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,301 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
4. உலக அளவில் கொரோனா வைரசுக்கு பலி எண்ணிக்கை 53 ஆயிரத்தை தாண்டியது
உலக அளவில் கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 53 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
5. கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில் சீனா, தென்கொரியா, ஜெர்மனி உதவியை இந்தியா நாடுகிறது
கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் தொழில்நுட்ப நடைமுறைகளில் சீனா, தென்கொரியா, ஜெர்மனி ஆகிய நாடுகளின் உதவியை இந்தியா நாடி உள்ளது.