உலக செய்திகள்

கொலம்பியாவில் விமானம் விழுந்து நொறுங்கி 4 பேர் பலி + "||" + 4 killed as plane crashes in Colombia

கொலம்பியாவில் விமானம் விழுந்து நொறுங்கி 4 பேர் பலி

கொலம்பியாவில் விமானம் விழுந்து நொறுங்கி 4 பேர் பலி
கொலம்பியாவில் விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் 4 பேர் பலியாகினர்.
போகோடா, 

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான கொலம்பியாவின் தலைநகர் போகோடாவில் இருந்து நேற்று காலை சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. இரட்டை என்ஜின்கள் கொண்ட இந்த விமானத்தில் விமானி உள்பட 4 பேர் பயணம் செய்தனர்.

புறப்பட்டு சென்ற சில நிமிடங்களில் விமானம், விமானியின் கட்டுப்பாட்டை இழந்து, தரையில் விழுந்து நொறுங்கியது. இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

விமானத்தின் என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. கொலம்பியாவில் கார் வெடித்து சிதறி 7 பேர் பலி
கொலம்பியாவில் கார் வெடித்து சிதறி 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
2. துருக்கியில் விமானம் தரையிறங்கும் போது விபத்து ; 3 பேர் பலி, 179 பேர் காயம்
துருக்கியில் விமானம் தரையிறங்கும் போது ஓடுபாதையில் இருந்து சறுக்கி விபத்துக்குள்ளானது
3. கோவை அருகே கார் மீது லாரி மோதி விபத்து, கேரளாவை சேர்ந்த சிறுவன் உள்பட 4 பேர் சாவு
கோவை அருகே கார் மீது லாரி மோதி கேரளாவை சேர்ந்த சிறுவன் உள்பட 4 பேர் பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
4. சீனாவில் ஆற்றில் ரெயில் கவிழ்ந்து 4 பேர் பலி
சீனாவில் ஆற்றில் ரெயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாயினர்.
5. கொலம்பியாவில் ருசிகரம்: குழந்தையின் உயிரைக்காப்பாற்றிய பூனை - இணையத்தில் வைரலாகும் வீடியோ
கொலம்பியாவில் குழந்தையின் உயிரைக்காப்பாற்றிய பூனையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.