கொடூர கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்ற சீனா புதிய திட்டம்


கொடூர கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்ற சீனா புதிய திட்டம்
x
தினத்தந்தி 14 Feb 2020 9:44 AM GMT (Updated: 14 Feb 2020 9:44 AM GMT)

அருகில் இருப்பவருக்கு நோய் பாதிப்பு இருக்கா? என்பதை கண்டறிய புதிய மொபைல் ஆப் ஒன்றை சீன் அரசு வெளியிட உள்ளது.

பெய்ஜிங்

கொரோனா என்னும் கொடிய வைரஸ் பாதிப்பு கடந்த இரண்டு மாதங்களாக சீனாவை ஆட்டிப் படைத்து வருகிறது. இந்த வைரஸ் தாக்குதல் காரணமாக இதுவரை சீனாவில் மட்டும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,380 ஆக உயர்ந்துள்ளது.  60,380 பேர் உலக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய் மனிதர்களிடமிருந்து எளிதாக பரவுகிறது என்பதால், இதைக் கட்டுப்படுத்த முடியாமல் சீனா திணறி வருகிறது.

நேற்று ஒரே நாளில் புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,090 ஆக இருந்தது. இதில் ஹூபே மாகாணத்தில் மட்டும் 4,823 பேர் என்பது கவனிக்கத்தக்கது.

சீனா தவிர்த்து 27 நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு பரவியிருக்கும் நிலையில் ஜப்பானைச் சேர்ந்த சொகுசுக் கப்பலில் 219 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சீனா புதிய ஸ்மார்ட் போன் ஆப் ஒன்றை வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆப்பானது தங்களுக்கு அருகில் உறுதிபடுத்தப்பட்ட மற்றும் சந்தேகத்திற்கு அடிப்படையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்கள் இருக்கிறார்களா? இல்லையா என்பதை காட்டும் என்று கூறப்படுகிறது.

இதைப் பற்றிய தகவல் வெளியானவுடன் சுமார் 10 கோடி  சீன மக்கள் இது குறித்து விசாரிக்க ஆரம்பித்துள்ளதாகவும், குறித்த ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த ஆப்பிற்கு போன் நம்பர், நபரின் பெயர் மற்றும் ஐ.டி எண் போன்றவை தேவைப்படும். வரும் திங்கட் கிழமை மாலை உள்ளூர் நேரப்படி 6 மணிக்கு இந்த ஆப் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை சீனா அகாடமி ஆஃப் இன்ஃபர்மேஷன் அண்ட் கம்யூனிகேஷன்ஸ் டெக்னாலஜி  உருவாக்கியுள்ளதாகவும், இதன் கிளை ஜிங்ஹூவாவில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. மேலும் இது, ஒன்று முதல் மூன்று கிலோ மீட்டர் தூரம் வெவ்வேறு முறையில், கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதை சரிபார்க்க உதவும் என்று கூறப்படுகிறது.

Next Story