உலக செய்திகள்

ர‌ஷியாவில் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கு சட்டபூர்வ அந்தஸ்து உண்டா? - அதிபர் புதின் பரபரப்பு கருத்து + "||" + Is there a legal status for homosexual marriage in Russia? - President Putin tabloid Comment

ர‌ஷியாவில் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கு சட்டபூர்வ அந்தஸ்து உண்டா? - அதிபர் புதின் பரபரப்பு கருத்து

ர‌ஷியாவில் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கு சட்டபூர்வ அந்தஸ்து உண்டா? - அதிபர் புதின் பரபரப்பு கருத்து
ர‌ஷியாவில் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கு சட்டபூர்வ அந்தஸ்து வழங்குவது குறித்து ரஷ்ய அதிபர் புதின் வெளியிட்டுள்ள கருத்து அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாஸ்கோ, 

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தைவான் ஆகிய நாடுகளில் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டு உள்ளது. அந்த வகையில் ர‌ஷியாவிலும் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்தை சட்டபூர்வமாக்க வேண்டுமென நீண்டகாலமாக கோரிக்கை இருந்து வருகிறது.

ஆனால் மேற்கத்திய கலாசாரங்களில் இருந்து ர‌ஷியாவை விலக்கிவைக்க விரும்பும் அந்த நாட்டின் அதிபர் புதின், ஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்தை கடுமையாக எதிர்த்து வருகிறார்.

இந்த நிலையில் தான் அதிபராக இருக்கும்வரை ர‌ஷியாவில் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணம் சட்டபூர்வமாகாது என்று புதின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

தாய், தந்தை என அழைக்கப்படும் பாரம்பரிய முறை, பெற்றோர் 1, பெற்றோர் 2 என்று அழைக்கப்படுவதன் மூலம் திசை திருப்பப்படுவதை நான் அனுமதிக்கமாட்டேன்.

நான் இது தொடர்பாக ஏற்கனவே கருத்து தெரிவித்திருக்கிறேன். எனினும் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணம் குறித்த எனது நிலைப்பாட்டை மீண்டும் விளக்குகிறேன். நான் ர‌ஷியாவின் அதிபராக இருக்கும்வரை இங்கு ஓரின சேர்க்கையாளர்களின் திருமணம் நடைபெறுவதை சட்டபூர்வமாக்கமாட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.