போலந்து நாட்டில் கால்வாய் திட்டத்துக்கு வினோத போராட்டம் நடத்தி எதிர்ப்பை தெரிவித்த தம்பதி


போலந்து நாட்டில் கால்வாய் திட்டத்துக்கு   வினோத போராட்டம் நடத்தி எதிர்ப்பை தெரிவித்த தம்பதி
x
தினத்தந்தி 15 Feb 2020 11:00 PM GMT (Updated: 15 Feb 2020 6:49 PM GMT)

போலந்து நாட்டில் கால்வாய் திட்டத்துக்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்க ஒரு தம்பதி வினோதமான போராட்டம் நடத்தினர்.

வார்சா, 

போலந்து நாட்டில் பால்டிக் கடலில் இருந்து கிழக்கு கடலோர பகுதியை  பிரிக்கும் குறுகலான ஒரு நில பரப்பை குறைத்து ஒரு கால்வாய் அமைக்கும்  திட்டத்தை ஆளும் சட்டம் மற்றும் நீதிக்கட்சி நிறைவேற்ற விரும்புகிறது. 

இப்படி செய்வது, அந்த நாட்டின் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு  காரணங்களுக்கு தேவையாக இருக்கிறது என்று அந்த கட்சி கூறுகிறது.

இந்த கால்வாய் திட்டத்தை நிறைவேற்றுவது சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் என்று ஐரோப்பிய கூட்டமைப்பு கவலைப்படுகிறது.

ஆனாலும் இந்த திட்டத்தை போலந்து அரசு நிறைவேற்றுவதில் தீவிரமாக இருப்பதால் அதற்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளன.

இந்த நிலையில், கால்வாய் திட்டம் நிறைவேற்ற உள்ள விஸ்டுலா ஸ்பிட் என்ற இடத்தில் ஒரு தம்பதியர், காதலர் தினத்தன்று (நேற்று முன்தினம்) தங்களது எதிர்ப்பை தெரிவிக்க ஒரு வினோதமான போராட்டம் நடத்தினர். அவர்கள் அங்கு ஒரு படுக்கையில் ஆடையின்றி கிடந்து போராட்டம் நடத்தினர்.

அவர்கள் அருகில் பிற போராட்டக்காரர்கள் “காதல் செய்யுங்கள், கால்வாய் செய்ய வேண்டாம்” என எழுதப்பட்ட பதாகையை ஏந்திப் பிடித்து இருந்தனர்.

இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story