ராணுவ தளபதிக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்க வேண்டும் ; அமெரிக்காவுக்கு இலங்கை கோரிக்கை


இலங்கை ராணுவ தளபதி ஷவேந்திர சில்வா (Reuters Image)
x
இலங்கை ராணுவ தளபதி ஷவேந்திர சில்வா (Reuters Image)
தினத்தந்தி 17 Feb 2020 1:25 AM GMT (Updated: 17 Feb 2020 1:25 AM GMT)

ராணுவ தளபதிக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்க வேண்டும் என்று அமெரிக்காவுக்கு இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பு,

இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு நடந்த இறுதிப்போரில் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். அப்போது இலங்கையின் வடக்கு பிராந்தியத்தில் ராணுவ தளபதியாக இருந்தவர் ஷவேந்திர சில்வா. தற்போது இலங்கையின் ராணுவ தளபதியாக உள்ளார். 

அவர் மீதான போர்குற்றங்களை முன்வைத்து அவர் தங்கள் நாட்டுக்குள் நுழைய அமெரிக்கா தடை விதித்துள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு இலங்கை அரசும், அந்நாட்டு எதிர்க்கட்சியும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த நிலையில், இலங்கைக்கான அமெரிக்க தூதர் அலைனா டெப்லிட்சை நேரில் அழைத்த இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்த்தனே, இலங்கை ராணுவத்தளபதிக்கு எதிரான தடையை விலக்கி கொள்ள வேண்டும் எனக்கோரிக்கை விடுத்தார். 


Next Story