ஜப்பான் சொகுசு கப்பலில் உள்ள 40 அமெரிக்கர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு


ஜப்பான் சொகுசு கப்பலில் உள்ள 40 அமெரிக்கர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு
x
தினத்தந்தி 17 Feb 2020 2:44 AM GMT (Updated: 17 Feb 2020 2:44 AM GMT)

ஜப்பான் சொகுசு கப்பலில் உள்ள 40 அமெரிக்கர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதாக அமெரிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வாஷிங்டன்,

ஹாங்காங்கில் இருந்து ஜப்பான் துறைமுகத்துக்கு வந்த ‘டைமண்ட் பிரின்சஸ்’ சொகுசு கப்பல்  கொரோனா வைரஸ் பீதி காரணமாக நடுக்கடலிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. அதில் இருந்த 3 ஆயிரத்து 711  பயணிகள், ஊழியர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டன. இதில் பலருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது.

இந்த நிலையில், சொகுசு கப்பலில் உள்ள அமெரிக்கர்கள் 40 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக அமெரிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

மேலும், ஜப்பான் கப்பலில் உள்ள 400 அமெரிக்கர்கள், சொந்த நாட்டுக்கு அழைத்து வரப்படுவார்கள் எனவும், அமெரிக்காவில் 14 நாட்கள் தனிமை படுத்தப்பட்ட முகாமில் வைத்து அவர்கள் கண்காணிக்கப்படுவார்கள் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்கள் அமெரிக்கா அழைத்து வரப்பட மாட்டார்கள் என்றும் அமெரிக்க அதிகாரிகள் கூறினர். 



Next Story