கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் : ஜப்பானில் மன்னர் பிறந்த நாள் கொண்டாட்டம் ரத்து


கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் : ஜப்பானில் மன்னர் பிறந்த நாள் கொண்டாட்டம் ரத்து
x
தினத்தந்தி 17 Feb 2020 7:46 AM GMT (Updated: 17 Feb 2020 8:26 AM GMT)

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஜப்பானில் மன்னர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

டோக்கியோ, 

சீனாவில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் ஹுபெய் மாகாண தலைநகர் உகானில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது.  இதன்பின்னர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் என நாடு முழுவதும் பரவியது.  எனினும், உகானில் இந்த வைரஸ் அதிக பாதிப்பு ஏற்படுத்தியது.  இதனால் தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.  சீனாவில் மட்டும் சுமார் 1765 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். 

உலகம் முழுவதும் கொரானா வைரஸ் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், ஜப்பானில் மன்னர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.  ஜப்பானில் வழக்கமாக அந்நாட்டின் மன்னர் பிறந்த நாள் பிரம்மாண்டமாக கொண்டாடப்படுவது வழக்கம். ஜப்பான் மக்கள் வீதிகளில் பெருமளவில் கூடி மன்னரின் பிறந்த நாளை கொண்டாடுவர். ஆனால், நிகழாண்டு, மன்னர்  நருஹிட்டோ பிறந்த நாள் கொண்டாட்டம் ரத்து செய்யப்படுவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

ஜப்பானில் கொரோனா வைரசால் தற்போது வரை ஒருவர்  உயிரிழந்துள்ளார். 414 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

Next Story