உலக செய்திகள்

சிரியா ஆட்சியின் அட்டூழியங்களுக்கு ரஷ்யா ஆதரவு வழங்குவதை நிறுத்த வேண்டும் -அமெரிக்கா + "||" + Trump,Turkey call on Russia to stop backing Syrian 'atrocities'

சிரியா ஆட்சியின் அட்டூழியங்களுக்கு ரஷ்யா ஆதரவு வழங்குவதை நிறுத்த வேண்டும் -அமெரிக்கா

சிரியா ஆட்சியின் அட்டூழியங்களுக்கு ரஷ்யா ஆதரவு  வழங்குவதை நிறுத்த வேண்டும் -அமெரிக்கா
சிரியா ஆட்சியின் அட்டூழியங்களுக்கு ரஷ்யா தனது ஆதரவை வழங்குவதை நிறுத்துமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறி உள்ளார்.
வாஷிங்டன்

சிரியாவில்  அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கும்  கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே  கடந்த 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.அதிபர் ஆசாத்துக்கு ரஷ்யாவும்,  கிளர்ச்சிப் படைகளுக்கு அமெரிக்கா, துருக்கி உள்ளிட்ட நாடுகளும் ஆதரவு அளித்து வருகின்றன.

சிரியா உள்நாட்டுப் போரில் கடந்த 4 மாதங்களில் 1,000 பேர் உயிரிழந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர். இந்நிலையில், சிரியாவின் இட்லிப் நகரில்  இடம்பெற்று வரும் வன்முறை குறித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கவலை தெரிவித்துள்ளார்.மேலும், டிரம்ப் - துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகனுடனான தொலைபேசி உரையாடலில்  ஆசாத் ஆட்சியின் அட்டூழியங்களுக்கு ரஷ்யாவின் ஆதரவை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்காவின் விருப்பத்தை தெரிவித்தார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி பஷர் அல்-ஆசாத்தின் படைகள் ஞாயிற்றுக்கிழமை வடமேற்கு பிராந்தியமான இட்லிப்பில் கிளர்ச்சிப் படைக்கு எதிராக நடந்த இறுதிக்கட்ட தாக்குதலில் வெற்றிகளைப் பெற்றன. மேலும். இட்லிப் முழுவதும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது என அல்-ஆசாத் படைகள் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. பியர்ல் ஹார்பர்-இரட்டை கோபுரம் தாக்குதலை விட வேதனையை இந்த வாரம் சந்திக்க வேண்டும் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை
பியர்ல் ஹார்பர் தாக்குதல்,இரட்டை கோபுரம் தாக்குதலை விட வேதனை தரும் சூழ்நிலையை கொரோனாவால் இந்த வாரம் அமெரிக்கா சந்திக்க நேரிடும் என மருத்துவ நிபுணர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
2. உயிரியல் பூங்காக்களில் உள்ள விலங்குகளை கண்காணிக்க உயிரியல் பூங்கா ஆணையம் உத்தரவு
விலங்குகளை கண்காணிக்குமாறு நாடு முழுவதும் உள்ள உயிரியல் பூங்காக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
3. அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் 1,200 பேர் கொரோனா வைரசால் உயிரிழப்பு
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,200 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
4. ஊரடங்கின் போது சத்தமாக பேசிய 5 பேர் சுட்டுக்கொலை
ரஷ்யாவில் ஊரடங்கு சட்டம் அமலில் உள்ள போது தன் வீட்டு வாசலில் சத்தமாக பேசிய 5 பேரை ரஷ்யர் ஒருவர் சுட்டுக் கொலைசெய்து உள்ளார்.
5. அமெரிக்க மக்களுக்கு அடுத்த இருவாரங்கள் மோசமானதாக இருக்கும்; டிரம்ப்
அமெரிக்க மக்களுக்கு அடுத்த இருவாரங்கள் மிக மோசமானதாக இருக்கும் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.