உலக செய்திகள்

ஜப்பானிய கப்பலில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 542 ஆக உயர்வு + "||" + 542 persons affected by coronavirus on Diamond Princess cruise ship off Japan

ஜப்பானிய கப்பலில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 542 ஆக உயர்வு

ஜப்பானிய கப்பலில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 542 ஆக உயர்வு
ஜப்பானிய கப்பலில் கொரோனா வைரஸ் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 542 ஆக உயர்வடைந்து உள்ளது.
யோகோஹமா,

ஹாங்காங்கில் இருந்து ஜப்பான் துறைமுகத்துக்கு வந்த ‘டைமண்ட் பிரின்சஸ்’ என்ற சொகுசு கப்பல், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நடுக்கடலிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.  அதில் இருந்த 3 ஆயிரத்து 711 பயணிகள், ஊழியர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.  இதில் பலருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது.

சொகுசு கப்பலில் 138 இந்தியர்கள் உள்ளனர். இதில் 132 பேர் கப்பல் ஊழியர்கள் ஆவர்.  இந்நிலையில், அவர்களில் 6 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

கப்பலில் இருந்தவர்களில் 1,219 பேருக்கு நடந்த பரிசோதனையின் முடிவில், கடந்த ஞாயிற்று கிழமை வரை, வைரஸ் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 355 ஆக இருந்தது.

தொடர்ந்து 681 பேரிடம் நடந்த பரிசோதனை முடிவுகளில் இருந்து 88 பேருக்கு புதிய வைரஸ் பாதிப்பு உள்ளது இன்று கண்டறியப்பட்டது.  இதனால் கொரோனா வைரஸ் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கையானது 542 ஆக உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 621, பலி 6 ஆக உயர்வு
தமிழகத்தில் 50 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
2. கொரோனா பாதிப்பு; உலகம் முழுவதும் பலி எண்ணிக்கை 70 ஆயிரத்து 320 ஆக உயர்வு
கொரோனா பாதிப்புக்கு உலகம் முழுவதும் பலி எண்ணிக்கை 70 ஆயிரத்து 320 ஆக உயர்ந்து உள்ளது.
3. இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 83 ஆக உயர்வு
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 505 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
4. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 571 ஆக உயர்வு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 571 ஆக உயர்ந்து உள்ளது.
5. உலகம் முழுவதும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 12.14 லட்சம் ஆக உயர்வு
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 65 ஆயிரத்து 605 ஆக உயர்ந்து உள்ளது.