கொரோனா வைரஸ் பாதிப்பு: எய்ட்ஸ் நோய்க்கான மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்க ஜப்பான் திட்டம்


படம்: REUTERS/Athit Perawongmetha
x
படம்: REUTERS/Athit Perawongmetha
தினத்தந்தி 18 Feb 2020 12:17 PM GMT (Updated: 18 Feb 2020 12:17 PM GMT)

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு எய்ட்ஸ் நோய்க்கான மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்க ஜப்பான் அரசு திட்டமிட்டு உள்ளது.

டோக்கியோ

ஜப்பானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவர்களுக்கு சோதனை அடிப்படையில் எய்ட்ஸ் நோய்க்கான மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து விவரித்த  ஜப்பானின் தலைமை அமைச்சரவை செயலாளர் யோஷி ஹைட் சுகா, எய்ட்ஸ் மருந்துகள் மூலம் சிகிச்சை அளிப்பதற்கான சோதனைகளை விரைவில் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகக் கூறினார்.

டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள 454 பேர் உட்பட ஜப்பானில் இதுவரை 520 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே தாய்லாந்து மருத்துவர்கள் எய்ட்ஸ்  மருந்துகளை கலந்து கொரானா பாதிப்புக்கு சிகிச்சை அளித்ததில் வெற்றி கண்டதாக தெரிவித்த நிலையில், ஜப்பானும் அந்த முயற்சியில் ஈடுபடவுள்ளது.

Next Story