பருவநிலை மாற்றத்தை எதிர்த்து போராட அமேசான் ரூ.71 ஆயிரம் கோடி நிதி


பருவநிலை மாற்றத்தை எதிர்த்து போராட அமேசான் ரூ.71 ஆயிரம் கோடி நிதி
x
தினத்தந்தி 19 Feb 2020 12:15 AM GMT (Updated: 18 Feb 2020 11:55 PM GMT)

பருவநிலை மாற்றத்தை எதிர்த்து போராட அமேசான் நிறுவனம் சார்பாக ரூ.71 ஆயிரம் கோடி நிதி வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூயார்க், 

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும், அமேசான் நிறுவனத்தின் தலைவருமான ஜெப் போசஸ் பருவநிலை மாற்றத்தை எதிர்த்து போராட 10 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.71 ஆயிரம் கோடி) நிதியுதவி வழங்குவதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

‘போசஸ் எர்த் பண்ட்’ தொடங்குவதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். பருவநிலை மாற்றம் என்பது நமது பூமிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். பருவநிலை மாற்றத்தை எதிர்த்து போராடுவதற்கான தெரிந்த வழிகளை அதிகரிக்கவும், புதிய வழிகளை ஆராயவும் மற்றவர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்.

நான் இந்த திட்டத்தை தொடங்குவதற்கு 10 பில்லியன் டாலர் (ரூ.71 ஆயிரம் கோடி) செலவிடுகிறேன். விஞ்ஞானிகள், ஆர்வலர்கள் மற்றும் பிற குழுக்களின் செயல்பாடுகளுக்கு இந்த நிதி உதவும். பூமி என்பது நம் அனைவருக்கும் பொதுவானது. அதை நாம் ஒன்றாக பாதுகாப்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story