உலக செய்திகள்

பாகிஸ்தானில் விஷ வாயு தாக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்வு + "||" + Death toll from toxic gas leak rises to 14 in Pakistan

பாகிஸ்தானில் விஷ வாயு தாக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்வு

பாகிஸ்தானில் விஷ வாயு தாக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்வு
பாகிஸ்தானில் விஷ வாயு தாக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.
கராச்சி, 

பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தின் தலைநகர் கராச்சியில் உள்ள கேமாரி துறைமுகத்துக்கு நேற்று முன்தினம் இரவு சரக்கு கப்பல் ஒன்று வந்தது. அந்த கப்பலில் கொண்டு வரப்பட்ட காய்கறிகள் நிரப்பப்பட்ட கன்டெய்னரை ஊழியர்கள் இறக்கினர்.

பின்னர் அந்த கன்டெய்னர் அருகில் உள்ள சந்தைக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு காய்கறிகளை தரம் பிரித்து, கடைகளுக்கு கொடுப்பதற்காக ஊழியர்கள் கன்டெய்னரை திறந்தனர். அப்போது கன்டெய்னரில் இருந்து விஷ வாயு வெளியேறியது.

விஷ வாயு தாக்கியதில் சுமார் 30 பேர் மூச்சு திணறலுக்கு உள்ளாகி சுருண்டு விழுந்தனர். அவர்கள் சுயநினைவை இழந்த நிலையில் மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர் ஆனால் செல்லும் வழியிலேயே 3 பெண்கள் உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 23 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில், பாகிஸ்தானில் கன்டெய்னரில் இருந்த வி‌‌ஷ வாயு தாக்கியதில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. விஷ வாயு தாக்கியது எப்படி என்பது குறித்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கு கொரோனா பாதிக்கப்பட்டவர்களை மாற்றி வரும் பாகிஸ்தான் அரசு
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கு கொரோனா பாதிக்கப்பட்டவர்களை மாற்றி வரும் பாகிஸ்தான் அரசுக்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
2. பாகிஸ்தான் ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்தது
பாகிஸ்தான் நடத்திய ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்தது.
3. கொரோனா பாதிப்பு : இந்தியாவைப் போல் பாகிஸ்தானில் ஊரடங்கை அறிவிக்க முடியாது- இம்ரான் கான்
கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவர இந்திய பிரதமர் நரேந்திர மோடியை போல் தன்னால் செயல்பட முடியாது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வேதனை தெரிவித்துள்ளார்.
4. பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து: 7 தொழிலாளர்கள் சாவு
பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்கத்தில் நிகழ்ந்த வெடி விபத்தில் சிக்கி 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
5. பாகிஸ்தானில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 720 ஆக உயர்வு
பாகிஸ்தானில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 720 ஆக உயர்ந்துள்ளது.