உலக செய்திகள்

ஆஸ்திரேலியாவில் 2 விமானங்கள் நடுவானில் மோதல்; 4 பேர் பலி + "||" + Four dead in plane collision in Australia

ஆஸ்திரேலியாவில் 2 விமானங்கள் நடுவானில் மோதல்; 4 பேர் பலி

ஆஸ்திரேலியாவில் 2 விமானங்கள் நடுவானில் மோதல்; 4 பேர் பலி
ஆஸ்திரேலியாவில் 2 விமானங்கள் நடுவானில் மோதி கொண்டதில் 4 பேர் பலியாகினர்.
மெல்போர்ன்,

ஆஸ்திரேலியாவின் விக்டோரியாவில் கிராமப்புற பகுதியில் இன்று முற்பகலில் 2 விமானங்கள் பறந்து சென்றுள்ளன.  விமானங்கள் தரையில் இருந்து 4 ஆயிரம் அடி உயரத்தில் இருந்தபொழுது, நடுவானில் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கின.

அவை தீப்பிடித்தபடியே வயலில் விழுந்து நொறுங்கின.  விபத்தில் இரு விமானங்களின் பாகங்களும் உடைந்து, தீப்பிடித்து ஆங்காங்கே கிடந்தன.  இதில் இரு விமானங்களிலும் இருந்த தலா 2 பேர் உயிரிழந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்து அவசரகால பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.  விபத்து நடந்தது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ரஷ்யாவில் தனியார் மருத்துவமனையில் தீ விபத்து; 7 பேர் பலி
ரஷ்யாவில் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 7 பேர் பலியாகி உள்ளனர்.
2. சிரியாவில் பயங்கரம்: டேங்கர் லாரி அடுத்தடுத்து 17 வாகனங்கள் மீது மோதி விபத்து - 32 பேர் பலி
சிரியாவில் டேங்கர் லாரி ஒன்று அடுத்தடுத்து 17 வாகனங்கள் மீது மோதி ஏற்படுத்திய விபத்தில் சிக்கி 32 பேர் பலியாகினர்.
3. மராட்டியத்தில் பஸ்-ஆட்டோ மோதி கிணற்றுக்குள் விழுந்ததில் 20 பேர் பலி
மராட்டியத்தில் பஸ் மற்றும் ஆட்டோ ரிக்ஷா மோதி கிணற்றுக்குள் விழுந்ததில் 20 பேர் பலியாகி உள்ளனர்.