சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றுள்ள பணத்தை எரிக்க முடிவு


சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றுள்ள பணத்தை எரிக்க முடிவு
x
தினத்தந்தி 19 Feb 2020 3:16 PM GMT (Updated: 19 Feb 2020 3:16 PM GMT)

சீனாவில் கொரோனா வைரஸ் உயிரிழப்பு அதிகரித்து வரும் நிலையில், வைரஸ் தொற்றுள்ள கரன்சி நோட்டுகளை எரிக்க அந்நாட்டு மத்திய வங்கி முடிவு செய்துள்ளது.

பெய்ஜிங்,

சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகரான உகானில் இருந்து நாடு முழுவதும் பரவிய கொரோனா வைரஸ், தற்போது சீனாவை மட்டுமின்றி உலகம் முழுவதையும் கடுமையாக மிரட்டி வருகிறது.  இந்த வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், பலியானோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சீன மருத்துவத்துறையும், அரசும் செய்வதறியாது திகைத்து வருகின்றன.  தற்போது வரை கொரானோ வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது.  வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74,185 ஆக உள்ளது.

இதனிடையே, சீனாவில் கொரோனா வைரஸ் உயிரிழப்பு அதிகரித்து வரும் நிலையில், வைரஸ் தொற்றுள்ள கரன்சி நோட்டுகளை எரிக்க அந்நாட்டு மத்திய வங்கி முடிவு செய்துள்ளது. வைரஸ் தொற்று பாதிப்புள்ள பகுதியில் உள்ள வங்கிக்கு வரும் நோட்டுகளை, 14 நாட்களில், அதிக வெப்பத்தில் வைத்து எரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

Next Story