உலக செய்திகள்

3 அமெரிக்க பத்திரிகையாளர்களை வெளியேற்றியது, சீனா + "||" + China to expel three Wall Street Journal reporters

3 அமெரிக்க பத்திரிகையாளர்களை வெளியேற்றியது, சீனா

3 அமெரிக்க பத்திரிகையாளர்களை வெளியேற்றியது, சீனா
கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து பேசிய 3 அமெரிக்க பத்திரிகையாளர்களை வெளியேற்றியது சீனா.
பீஜிங், 

அமெரிக்காவின் முன்னணி பத்திரிகையான வால் ஸ்ட்ரீட் ஜர்னல்ஸ் சமீபத்தில் ஒரு கட்டுரை வெளியிட்டது. கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த அதன் தலைப்பு ‘ஆசியாவின் உண்மையான நோயாளி, சீனா‘ என்று இருந்தது. இது, சீனாவை இனரீதியாக அவமதிக்கும் கருத்து என்று சீன அரசு கொதித்தது. எனவே, மன்னிப்பு கேட்குமாறு அமெரிக்க பத்திரிகையை வலியுறுத்தியது. ஆனால், வால் ஸ்ட்ரீட் ஜர்னல்ஸ் கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து, சீனாவில் பணியாற்றி வரும் வால் ஸ்ட்ரீட் ஜர்னல்ஸ் செய்திப்பிரிவு துணைத்தலைவர் ஜோஷ் சின், நிருபர்கள் சாவோ டெங், பிலிப் வென் ஆகியோரை 5 நாட்களுக்குள் வெளியேறுமாறு சீன வெளியுறவு அமைச்சகம் கெடு விதித்துள்ளது.

அவர்களின் விசா ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர்களின் பத்திரிகையாளா் அங்கீகார அடையாள அட்டைகள் பறிக்கப்பட்டன. 5 சீன ஊடகங்களுக்கு எதிராக அமெரிக்கா சமீபத்தில் நடவடிக்கை எடுத்தது. அதற்கு பதிலடியாக சீனா இந்த முடிவை எடுத்திருப்பதாக கருதப்படுகிறது.