உலகில் அதிகம் வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது ; டிரம்ப் விமர்சனம்


உலகில் அதிகம் வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது ; டிரம்ப் விமர்சனம்
x
தினத்தந்தி 21 Feb 2020 5:44 AM GMT (Updated: 21 Feb 2020 5:45 AM GMT)

உலகில் அதிகம் வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் விமர்சித்துள்ளார்.

வாஷிங்டன், 

அமெரிக்க அதிபர்  டொனால்டு டிரம்ப் , மனைவி மெலனியா டிரம்ப்  ஆகியோர் வரும் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்கின்றனர். டொனால்டு டிரம்பை வரவேற்க  அகமதாபத்தில் சிறப்பான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.  டிரம்ப் செல்லும் 22 கி.மீ. சாலை வழி பயணத்தில் அவரை வரவேற்க 2 லட்சத்துக்கும் அதிகமானோர்  வருவார்கள் என்று சொல்லப்படுகிறது. 

டிரம்பை வரவேற்க பிரம்மாண்ட ஏற்பாடுகளுக்கு இந்தியா தயாராகி வரும் நிலையில், இந்தியாவை விமர்சிக்கும் வகையில் டிரம்ப் பேசியிருக்கிறார். டிரம்ப் கூறியிருப்பதாவது ;-  அடுத்த வாரம் நான் இந்தியாவுக்கு செல்ல இருக்கிறேன்.  வர்த்தகம் தொடர்பாக பேச இருக்கிறேன். 

பல ஆண்டுகளாக  நமக்கு (அமெரிக்கா) இந்தியா நெருக்கடி கொடுத்து வருகிறது.  பிரதமர் மோடியை எனக்கு மிகவும் பிடிக்கும். எனினும், வர்த்தகம் தொடர்பாக சிறிது  பேச வேண்டியுள்ளது.  உலகில் அதிகம் வரிவிதிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது” என்று தெரிவித்துள்ளார். 


Next Story