"உள்ள ஒரே இருட்டு.. ஒரு லைட்டு கூட இல்ல" பிறந்தவுடனேயே மீம்ஸ் ஆன குழந்தை


உள்ள ஒரே இருட்டு.. ஒரு லைட்டு கூட இல்ல பிறந்தவுடனேயே மீம்ஸ் ஆன குழந்தை
x
தினத்தந்தி 22 Feb 2020 9:28 AM GMT (Updated: 22 Feb 2020 9:28 AM GMT)

பிறந்த குழந்தை ஒன்று, “உள்ளே ஒரே இருட்டு...ஒரு லைட்டு கூட இல்ல” என்கிறபடி மருத்துவரை பார்த்து முறைப்பது போன்ற புகைப்படம் ஒன்று இணையத்தில் வட்டமடித்து வருகிறது.

ரியோ டி ஜெனிரோ

நாம் பயணம் செய்யும் பஸ்ஸிலோ,ரெயிலிலோ அல்லது  அலுவலகத்திலோ ஸ்மார்ட் போனை பார்த்தபடி, யாராவது திடீரென ஒருவர் உரக்க  சிரித்தால் அது எல்லாம் மீம்ஸ் படுத்தும் பாடு. 

ஸ்மார்ட் போன் உபயோகப்படுத்தும் பலர் இன்னும் பைத்தியம் ஆகாமல் இருப்பதற்கு  சிரிக்க சிந்திக்க வைக்கும் மீம்சுகளும் ஒரு காரணம்.

இப்போது முதல் முறையாக பிறந்த குழந்தை ஒன்று பிறந்தவுடனேயே  மீம்ஸ் கிரியேட்டர்களிடம் சிக்கி  வைரலாகி உள்ளது.

பிரேசிலில் அழ வைக்க முயற்சித்த மருத்துவரை பிறந்த குழந்தை ஒன்று கடுப்புடன் முறைத்து பார்ப்பது போன்ற புகைப்படம் சமூக வலைளதளங்களில் வைரலாகி உள்ளது.

பிறந்தவுடனே குழந்தைகள் வீல் என்று அழும் என்பதற்கு மாறாக ரியோ டி ஜெனிரோவில் கடந்த 13 ஆம் தேதி பிறந்த இசபெலா என்ற பெண் குழந்தை அமைதியாக இருந்ததால், மருத்துவர் அழ வைக்க முயற்சிக்கிறார்.

அப்போது புருவங்களை சுருக்கி கண்களால் கோபத்தை வெளிகாட்டுவது போல் பார்த்த குழந்தை, தொப்புள் கொடியை துண்டித்தவுடன் வீல் என்று அழுகிறது . தொடர்ந்து இயல்பு நிலைக்கு திரும்பியது. புகைப்படக் காரர் ஒருவர் படம் பிடித்த இந்தக் காட்சியை, இணையதளவாசிகள் உள்ள ஒரே இருட்டு..! லைட்டு கூட இல்ல..! வடிவேல் டயலாக்குக்கு போல்  தங்களுக்குகேற்ற வகையில் மீம்ஸ்களாக மாற்றி பதிவிட்டு வருகின்றனர்.


Next Story