உலக செய்திகள்

பாகிஸ்தானில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை + "||" + Five terrorists shot dead in Pakistan

பாகிஸ்தானில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

பாகிஸ்தானில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
பாகிஸ்தானில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
பெஷாவர்,

பாகிஸ்தானில் ஜாகாய் மலைப்பகுதியில் இருந்து பயங்கரவாதிகள் பெஷாவர் நகரையொட்டிய ஷாகாய் பகுதியில் நுழைந்து ஒரு வளாகத்தில் தங்கி இருந்து பயங்கரவாத தாக்குதல் நடத்துவதற்கு சதித்திட்டம் தீட்டிக்கொண்டிருந்தனர்.


இது குறித்த ரகசிய தகவல், பாகிஸ்தான் பயங்கரவாத தடுப்பு படையினருக்கு நேற்று முன்தினம் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் உடனே அங்கு விரைந்து சென்று, பயங்கரவாதிகளை சுற்றி வளைத்தனர்.

ஆனால் அவர்களை நோக்கி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த முற்பட்டனர். உடனே சுதாரித்துக்கொண்ட பயங்கரவாத தடுப்பு படையினர் அதிரடியாக அவர்களை துப்பாக்கிகளால் சுட்டனர். இதில் 5 பேர் கொல்லப்பட்டனர்.

அவர்களில் ஒருவர் தற்கொலைப்படை பயங்கரவாதி, மனித வெடிகுண்டாக செயல்பட பயிற்றுவிக்கப்பட்டவர் என தெரிய வந்துள்ளது.

சம்பவ இடத்தில் இருந்து ஏராளமான வெடி பொருட்கள், குண்டுகள் பொருத்தப்பட்ட பெல்ட்டுகள், 2 கைத்துப்பாக்கிகள், 2 கையெறி குண்டுகள், 3 எந்திர துப்பாக்கிகள் உள்ளிட்டவற்றையும் பயங்கரவாத தடுப்பு படையினர் கைப்பற்றினர். இந்த சம்பவம், பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கு கொரோனா பாதிக்கப்பட்டவர்களை மாற்றி வரும் பாகிஸ்தான் அரசு
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கு கொரோனா பாதிக்கப்பட்டவர்களை மாற்றி வரும் பாகிஸ்தான் அரசுக்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
2. பாகிஸ்தான் ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்தது
பாகிஸ்தான் நடத்திய ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்தது.
3. கொரோனா பாதிப்பு : இந்தியாவைப் போல் பாகிஸ்தானில் ஊரடங்கை அறிவிக்க முடியாது- இம்ரான் கான்
கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவர இந்திய பிரதமர் நரேந்திர மோடியை போல் தன்னால் செயல்பட முடியாது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வேதனை தெரிவித்துள்ளார்.
4. பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து: 7 தொழிலாளர்கள் சாவு
பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்கத்தில் நிகழ்ந்த வெடி விபத்தில் சிக்கி 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
5. பாகிஸ்தானில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 720 ஆக உயர்வு
பாகிஸ்தானில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 720 ஆக உயர்ந்துள்ளது.