உலக செய்திகள்

பிரதமர் மோடியுடன் மத சுதந்திரம் பற்றி டிரம்ப் பேசுவார் - அமெரிக்கா தகவல் + "||" + Trump will talk about religious freedom with Prime Minister Modi - United States Information

பிரதமர் மோடியுடன் மத சுதந்திரம் பற்றி டிரம்ப் பேசுவார் - அமெரிக்கா தகவல்

பிரதமர் மோடியுடன் மத சுதந்திரம் பற்றி டிரம்ப் பேசுவார் - அமெரிக்கா தகவல்
நாளை இந்தியாவுக்கு வரும்போது, பிரதமர் மோடியுடன் மத சுதந்திரம் பற்றி டிரம்ப் பேசுவார் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
வாஷிங்டன்,

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நாளை (திங்கட் கிழமை) இந்தியா வருகிறார்.

இதையொட்டி அமெரிக்க ஜனாதிபதியின் வாஷிங்டன் வெள்ளை மாளிகை மூத்த அதிகாரி நேற்று முன்தினம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர், “நம் இரு நாடுகளுக்கும் இடையேயான வலுவான, நீடித்த உறவின் நிரூபணமாக ஜனாதிபதி இந்தியா செல்கிறார். ஜனநாயக மரபுகள், பொதுவான பாதுகாப்பு நலன்கள், இரு தரப்பு மக்கள் இடையேயான நீடித்த பிணைப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் நம் இரு நாட்டு உறவு அமைந்துள்ளது. மேலும் அதில் ஒரு பகுதி, நமது ஜனாதிபதிக்கும், பிரதமர் மோடிக்கும் இடையேயான நெருக்கமான உறவை எடுத்துக்காட்டுகிறது” என கூறினார்.


அப்போது அவரிடம், “குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை பற்றி பிரதமர் மோடியுடன் பேசுவதற்கு ஜனாதிபதி டிரம்ப் திட்டமிட்டு இருக்கிறாரா?” என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர் விரிவாக பதில் அளித்து கூறியதாவது:-

இந்தியாவும், அமெரிக்காவும் ஜனநாயக பாரம்பரியம் மற்றும் மத சுதந்திரத்தை கொண்டுள்ள நாடுகள் ஆகும். இதுபற்றி பொதுவெளியில் டிரம்ப் பேசி உள்ளார். நிச்சயமாக தனி சந்திப்பின்போதும் பேசுவார்.

பிரதமர் மோடியை சந்திக் கிறபோது, ஜனாதிபதி இந்த பிரச்சினைகள் பற்றி பேசுவார்.

இது நமது நிர்வாகத்துக்கு மிக முக்கியமானது.

நமது உலகளாவிய மதிப்புகள், சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றை நிலைநாட்டுவதில் நமக்கு அர்ப்பணிப்பு உள்ளது.

இந்தியாவின் ஜனநாயக மரபு மற்றும் அமைப்புகள் மீது நமக்கு மிகப்பெரிய மரியாதை இருக்கிறது. இந்த மரபை இந்தியா நிலைநிறுத்துவதற்கு நாம் தொடர்ந்து ஊக்கம் அளிப்போம்.

மேலும் இந்தியா தனது ஜனநாயக மரபுகளை நிலை நிறுத்த வேண்டும், மத சிறுபான்மையினருக்கு மரியாதை அளிக்க வேண்டும் என்று உலகம் எதிர்பார்க்கிறது.

நீங்கள் எழுப்பிய சில பிரச்சினைகளில் நாங்கள் அக்கறை கொண்டுள்ளோம்.

மத சுதந்திரம் வேண்டும், மத சிறுபான்மையினர் மீது மரியாதை வேண்டும், அனைத்து மதத்தினரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளது.

எனவே ஜனாதிபதி இந்த பிரச்சினையை எழுப்ப வேண்டியது முக்கியமான ஒன்று. நிச்சயமாக இது பேசப்படும்.

இந்தியா வளமான மதம், மொழி, கலாசாரம் ஆகியவற்றில் பன்முகத்தன்மை கொண்ட நாடு ஆகும். உண்மையை சொல்வதானால், உலகின் மிகப்பெரிய 4 மதங்கள் தோன்றிய நாடு இந்தியா.

பிரதமர் மோடி கடந்த ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றபோது பேசிய முதல் பேச்சில், இந்தியாவில் மத சிறுபான்மையினரை உள்ளடக்கியவர்களாக இருக்கச்செய்வதற்கு எவ்வாறு முன்னுரிமை அளிப்பார் என்பது பற்றி பேசினார்.

நிச்சயமாக இந்தியா மத சுதந்திரத்தை கடைப்பிடிக்க வேண்டும், சட்டத்தின் ஆட்சி நடக்கிற நாட்டில் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்று உலகம் எதிர்பார்க்கிறது என்று அவர் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கையில் இந்தியா முன்மாதிரியாக விளங்குகிறது ; பிரதமர் மோடி
கொரோனாவை தடுப்பதில் உலக நாடுகளுக்கு இந்தியா உதாரணமாக விளங்குகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
2. கொரோனாவை தடுப்பதில் உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக இந்தியா விளங்குகிறது; பிரதமர் மோடி
கொரோனாவை தடுப்பதில் உலக நாடுகளுக்கு இந்தியா உதாரணமாக விளங்குகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
3. மோடியிடம் உதவி கேட்ட டிரம்ப் - ‘கொரோனா சிகிச்சைக்கான மருந்தை அமெரிக்காவுக்கு வழங்குங்கள்’
கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க ஹைட்ரோகுளோரோகுயின் மருந்தை அமெரிக்காவுக்கு விற்பனை செய்யுமாறு பிரதமர் மோடியை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கேட்டுக் கொண்டார்.
4. தொலைபேசியில் அழைத்து பேசினார் பிரதமர் மோடியுடன் டிரம்ப் அவசர ஆலோசனை
கொரோனா வைரசுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடியுடன் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவசர ஆலோசனை நடத்தினார். இந்தியாவும், அமெரிக்காவும் கொரோனா வைரசுக்கு எதிராக முழு பலத்தையும் பயன்படுத்த ஒப்புக்கொண்டன.
5. பிரதமர் மோடியின் வீடியோ செய்தி, ஏமாற்றம் அளிக்கிறது - ப.சிதம்பரம் கருத்து
பிரதமர் மோடியின் வீடியோ செய்தி ஏமாற்றம் அளிப்பதாக ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.