ஈரான் எல்லையில் நிலநடுக்கம்; துருக்கியில் 7 பேர் பலி


ஈரான் எல்லையில் நிலநடுக்கம்; துருக்கியில் 7 பேர் பலி
x
தினத்தந்தி 23 Feb 2020 10:44 AM GMT (Updated: 23 Feb 2020 10:44 AM GMT)

ஈரான் எல்லையை ஒட்டிய பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு துருக்கியில் 7 பேர் பலியாகி உள்ளனர்.

இஸ்தான்புல்,

துருக்கி நாட்டின் கிழக்கு பகுதியில் ஈரான் நாட்டு எல்லையையொட்டிய ஹபாஷ்-இ ஓலியா என்ற கிராமம் அருகே இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.  இது ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவானது.

இந்நிலநடுக்கம் 6 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.  இதில் துருக்கி நாட்டை சேர்ந்த 3 குழந்தைகள் உள்பட 7 பேர் சிக்கி பலியாகி உள்ளனர்.  காயமடைந்த 5 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.  மற்றவர்கள் நிலநடுக்க இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்க கூடும்.  அவர்களை தேடும் மற்றும் மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன என துருக்கி நாட்டு உள்துறை மந்திரி சொய்லு கூறியுள்ளார்.

இதேபோன்று ஈரானின் மேற்கே அஜர்பைஜான் மாகாணத்தில் 4 கிராமங்களில்  பல வீடுகள் இடிந்து விழுந்துள்ளன.  25 பேர் காயமடைந்து உள்ளனர் என்று ஈரான் நாட்டு அவசரகால சேவைக்கான செய்தி தொடர்பு அதிகாரி காலேதி கூறினார்.

இதேபோன்று அருகேயுள்ள வான் மாகாணத்தில் பல கிராமங்களில் சேதம் ஏற்பட்டு உள்ளது.  இந்த பகுதியில் கடந்த மாதம் ஏற்பட்ட இரு பனி சரிவுகளில் சிக்கி 41 பேர் பலியாகினர்.

Next Story