அமெரிக்காவின் நிகழ்ந்த பஸ் விபத்தில் 3 பேர் பலி - 18 பேர் படுகாயம்


அமெரிக்காவின் நிகழ்ந்த பஸ் விபத்தில் 3 பேர் பலி - 18 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 23 Feb 2020 10:09 PM GMT (Updated: 23 Feb 2020 10:10 PM GMT)

அமெரிக்காவின் சாண்டியாகோ நகரில் நிகழ்ந்த பஸ் விபத்தில், 3 பேர் பலியாயினர். மேலும் 18 பேர் படுகாயம் அடைந்தனர்.


* சீனாவில் சிக்கியிருந்த ஜார்ஜியா நாட்டை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் அண்மையில் தாயகம் திரும்பினர். எனினும் கொரோனா வைரஸ் பீதி காரணமாக அவர்கள் அங்கு தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு உள்ளனர்.

* அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சாண்டியாகோ நகரில் சாலையில் சென்று கொண்டிருந்த பஸ், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் உருண்டு விழுந்தது. இந்த விபத்தில் 3 பேர் பலியானார்கள். 18 பேர் படுகாயம் அடைந்தனர்.

* கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக ஜப்பான் கடலில் தனிமைப்படுத்தி நிறுத்தப்பட்டுள்ள கப்பலில் இருந்த தங்கள் நாட்டு மக்கள் 8 பேரை ரஷியா தாயகம் அழைத்து சென்றது. அவர்களில் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

* லிபியாவில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் தங்கள் நாட்டு வீரர்கள் பலர் பலியானதாக துருக்கி அதிபர் தயீப் எர்டோகன் தெரிவித்துள்ளார். அதே சமயம் துருக்கி ராணுவத்தின் பதில் தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட கிளர்ச்சியாளர்கள் கொன்று குவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

* அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் நடக்க இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் ரஷியா மீண்டும் தலையிட முயற்சிப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், அதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை என்றும் அது வெறும் வதந்தி என்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரையான் தெரிவித்துள்ளார்.

Next Story