சீனாவுக்கு விமான போக்குவரத்து சேவை வரும் மார்ச் 15ந்தேதி வரை ரத்து; பாகிஸ்தான் முடிவு


சீனாவுக்கு விமான போக்குவரத்து சேவை வரும் மார்ச் 15ந்தேதி வரை ரத்து; பாகிஸ்தான் முடிவு
x
தினத்தந்தி 24 Feb 2020 7:47 AM GMT (Updated: 24 Feb 2020 7:47 AM GMT)

கொரோனா வைரஸ் பாதித்த சீனாவுக்கு விமான போக்குவரத்து சேவையை வரும் மார்ச் 15ந்தேதி வரை பாகிஸ்தான் ரத்து செய்துள்ளது.

இஸ்லாமாபாத்,

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 2,592 பேர் பலியாகியுள்ளனர்.  உலகம் முழுவதும் 79 ஆயிரம் பேர் பாதிப்புக்கு ஆளாகி இருக்கின்றனர்.

இதனை அடுத்து, கடந்த ஜனவரி 31ந்தேதியில் இருந்து பிப்ரவரி 2ந்தேதி வரை சீனாவுக்கான விமான போக்குவரத்து சேவையை பாகிஸ்தான் ரத்து செய்திருந்தது.  இதன்பின்பு கடந்த பிப்ரவரி 3ந்தேதி விமான போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியது.

இந்நிலையில், சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு தொடர்ந்து பலர் பலியாகி வரும் நிலையில், அந்நாட்டுக்கான விமான போக்குவரத்து சேவையை பாகிஸ்தான் ரத்து செய்துள்ளது.  இதுபற்றி பாகிஸ்தான் இன்டர்நேசனல் ஏர்லைன்ஸ் விமான நிறுவன செய்தி தொடர்பு அதிகாரி அப்துல்லா ஹபீஸ் கூறும்பொழுது, சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், வருகிற மார்ச் 15ந்தேதி வரை விமான போக்குவரத்து சேவையை ரத்து செய்வது என முடிவு செய்துள்ளோம்.

சீனாவுக்கு விமான போக்குவரத்து சேவையை மீண்டும் இயக்குவது பற்றி நிலைமையை கவனத்தில் கொண்டு முடிவு செய்யப்படும் என கூறினார்.

Next Story