உலக செய்திகள்

அமெரிக்காவில் விண்ணில் பறக்க முயன்ற விமானி தவறி விழுந்து சாவு + "||" + Pilot trying to land in the United States crashes and dies

அமெரிக்காவில் விண்ணில் பறக்க முயன்ற விமானி தவறி விழுந்து சாவு

அமெரிக்காவில் விண்ணில் பறக்க முயன்ற விமானி தவறி விழுந்து சாவு
அமெரிக்காவில் விண்ணில் பறக்க முயன்ற விமானி தவறி விழுந்து உயிரிழந்தார்.
நியூயார்க்,


அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்தவர் மைக் ஹியூஸ் (வயது 64). விமானியான இவர் பூமி தட்டையானது என்றும், அதனை நிரூபிப்பேன் என்றும் கூறி வந்தார்.

மேலும் அவர் விண்வெளிக்கு செல்வதற்காக முற்றிலும் நீராவியால் இயங்கும் ராக்கெட்டை வீட்டிலேயே தயாரித்து, அதனை தொடர்ந்து சோதித்து வந்தார். மைக், கடந்த ஆண்டு மார்ச் மாதம் தனது ராக்கெட் மூலம் தரையில் இருந்து 1,870 அடி உயரத்துக்கு பறந்து பாராசூட் மூலம் தரையிறங்கினார்.


இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை மீண்டும் தனது நீராவி ராக்கெட் மூலம் விண்ணில் பறக்க மைக் முயன்றார். இம்முறை 5,000 அடி உயரத்தை அடைய வேண்டும் என்பதை அவர் இலக்காக கொண்டிருந்தார்.

திட்டமிட்டபடி அவரது நீராவி ராக்கெட் விண்ணில் சீறிப் பாய்ந்தது. ஆனால் ராக்கெட் சென்ற வேகத்தில் அதனுடன் இணைக்கப்பட்டிருந்த பாராசூட் தனியே பிய்த்துக்கொண்டு சென்று விட்டது.

இதனால் பல நூறு அடி உயரத்தில் இருந்து ராக்கெட் தரையில் விழுந்து நொறுங்கியது. இதில் மைக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவில் புலிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு
அமெரிக்காவின் நியூயார்க்சிட்டியில் உள்ள வன உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் புலிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
2. அமெரிக்கா மீது ஜெர்மனி பரபரப்பு குற்றச்சாட்டு: ‘2 லட்சம் முக கவசங்களை திருடிவிட்டது’
2 லட்சம் முக கவசங் களை திருடிவிட்டதாக அமெரிக்கா மீது ஜெர்மனி பரபரப்பு குற்றம்சாட்டி உள்ளது.
3. அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஒரே நாளில் 1,480 பேர் பலி
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஒரே நாளில் 1,480 பேர் பலியாகியுள்ளனர்.
4. உலகம் முழுவதும் கொரோனா பலி 59 ஆயிரத்தை தாண்டியது
உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 59 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
5. அமெரிக்காவில் பலி எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது: ஜனாதிபதி டிரம்புக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை
அமெரிக்காவில் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் சூழலில் ஜனாதிபதி டிரம்புக்கு 2-வது முறையாக கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.