உலக செய்திகள்

இத்தாலியில் ரூ.3¾ கோடிக்கு ஏலம் போன மோனலிசா ஓவியம் + "||" + Monalisa painting auctioned in Italy for Rs 3.75 cr

இத்தாலியில் ரூ.3¾ கோடிக்கு ஏலம் போன மோனலிசா ஓவியம்

இத்தாலியில் ரூ.3¾ கோடிக்கு ஏலம் போன மோனலிசா ஓவியம்
இத்தாலியில் மோனலிசா ஓவியம் ஒன்று ரூ.3¾ கோடிக்கு ஏலம் போனது.
பாரீஸ்,

பிரான்சை சேர்ந்த பிரபல கலைஞர் ஒருவர் குழந்தைகளின் அறிவு திறனை அதிகரிக்க உதவும் ‘ரூபிக் கியூப்ஸ்’ என்ற விளையாட்டு பொருளில் உள்ள கண்கவர் பிளாஸ்டிக் சதுரங்களை வைத்து மோனலிசா ஓவியத்தை வடிவமைத்தார்.

மோனலிசாவின் தனித்துவமான புன்னகை மாறாமல் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட இந்த ஓவியம் கலை பிரியர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. பிரான்சில் உள்ள பல்வேறு அருங்காட்சியகங்களில் இந்த ஓவியம் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தது.


இந்த நிலையில், பாரீசில் உள்ள பிரபல ஏல நிறுவனம் ஒன்று, நேற்று முன்தினம் மோனலிசாவின் இந்த ஓவியத்தை ஏலத்தில் விட்டது. இந்த ஓவியத்துக்கு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.1 கோடி ஆரம்ப விலையாக நிர்ணயிக்கப்பட்டது.

ஆனாலும் ஏலம் தொடங்கியதுமே அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு ஏலம் கேட்டனர். இறுதியில் மோனலிசாவின் ஓவியம் ரூ.3 கோடியே 70 லட்சத்துக்கு ஏலம் போனது.


தொடர்புடைய செய்திகள்

1. இத்தாலியில் அக்டோபர் 15-ந் தேதி வரை அவசரநிலை நீட்டிப்பு: பிரதமர் கியூசெப் கோண்டே அறிவிப்பு
இத்தாலியில் அக்டோபர் 15-ந் தேதி வரை அவசரநிலை நீட்டிக்கப்படுவதாக, பிரதமர் கியூசெப் கோண்டே அறிவித்துள்ளார்.
2. உலகில் 6-வது இடத்தில் இந்தியா: கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் பாதிப்பு 2,36,657 ஆக உயர்வு
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,36,657 ஆக உயர்ந்ததை தொடர்ந்து, இத்தாலியை பின்னுக்கு தள்ளிவிட்டு உலக அளவிலான பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் 6-வது இடத்துக்கு இந்தியா சென்றுள்ளது.
3. இத்தாலியில் உள்நாட்டு பயணங்களுக்கான கட்டுப்பாடுகள் நீக்கம்
இத்தாலியில் உள்நாட்டு பயணங்களுக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.
4. இத்தாலியில் கொரோனா தாக்கம் குறைகிறது
இத்தாலியில் கொரோனா வைரசின் தாக்கம் குறைந்து வருகிறது.
5. இத்தாலியில் 2 மாத ஊரடங்கு முடிவுக்கு வந்தது
இத்தாலியில் சுமார் 2 மாதம் அமலில் இருந்த ஊரடங்கு முடிவுக்கு வந்துள்ளது.