உலக செய்திகள்

தமிழ்நாட்டில் இருந்து திருடப்பட்ட சிலை இங்கிலாந்தில் கண்டுபிடிப்பு: திருப்பி கொடுக்க இந்தியா வேண்டுகோள் + "||" + Statue stolen from Tamil Nadu India requests for repayment

தமிழ்நாட்டில் இருந்து திருடப்பட்ட சிலை இங்கிலாந்தில் கண்டுபிடிப்பு: திருப்பி கொடுக்க இந்தியா வேண்டுகோள்

தமிழ்நாட்டில் இருந்து திருடப்பட்ட சிலை இங்கிலாந்தில் கண்டுபிடிப்பு: திருப்பி கொடுக்க இந்தியா வேண்டுகோள்
தமிழ்நாட்டு கோவிலில் இருந்து திருடப்பட்ட திருமங்கை ஆழ்வார் சிலை, இங்கிலாந்து அருங்காட்சியகத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதை திருப்பி கொடுக்குமாறு இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது.
லண்டன்,

தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் சிலைகள் திருடு போவதும், அவை வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டது கண்டறியப்பட்டு, மீட்கப்படுவதும் தொடர்கதை ஆகி வருகிறது.

இந்த வரிசையில், தமிழ்நாட்டில் சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் உள்ள திருமங்கை ஆழ்வார் சிலை, கடந்த 1957-ம் ஆண்டு திருடு போனது. இது, 15-ம் நூற்றாண்டு வெண்கல சிலை ஆகும். அதே போன்ற போலி சிலையை அந்த இடத்தில் வைத்துள்ளனர்.


இந்நிலையில், அந்த சிலை, இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உள்ள அஷ்மோலியன் அருங்காட்சியகத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது. ஜே.ஆர்.பெல்மான்ட் என்ற கலெக்டரின் அபூர்வ பொருட்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்த இந்த சிலை, கடந்த 1967-ம் ஆண்டு, சூத்பி ஏல மையம் மூலமாக ஏலம் விடப்பட்டுள்ளது. அதை அஷ்மோலியன் அருங்காட்சியகம் ஏலத்தில் எடுத்துள்ளது.

இதற்கிடையே, கடந்த நவம்பர் மாதம், தனியார் ஆராய்ச்சியாளர் ஒருவர், அந்த திருமங்கை ஆழ்வார் சிலை, தமிழ்நாட்டில் இருந்து திருடப்பட்டது என்பதை கண்டுபிடித்து, அருங்காட்சியக நிர்வாகிகளிடம் தெரிவித்தார். உடனே, இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகத்துக்கு அருங்காட்சியக நிர்வாகிகள் தகவல் தெரிவித்தனர். கூடுதல் ஆதாரங்கள் இருந்தால் அளிக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

அதன்படி, தமிழ்நாட்டில் இருந்து சிலை தடுப்பு பிரிவு போலீசாரின் அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. அதில், தமிழ்நாட்டு கோவிலில் இருந்து திருடப்பட்ட திருமங்கை ஆழ்வார் சிலைதான் அது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், சிலையை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு இந்தியா சார்பில் முறைப்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

சிலையை ஒப்படைக்க அஷ்மோலியன் அருங்காட்சியகம் விருப்பம் தெரிவித்துள்ளது. இருப்பினும், தங்கள் பிரதிநிதியை தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைத்து, மேலும் ஆய்வு செய்து உறுதிப்படுத்த விரும்புவதாக கூறியுள்ளது.

அதை ஏற்றுக்கொண்ட இந்திய அதிகாரிகள், இந்த பணியை விரைவுபடுத்துமாறு வலியுறுத்தி உள்ளனர். இத்தகவலை லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் முதன்மை செயலாளர் (வர்த்தகம்) ராகுல் நந்த்கரே தெரிவித்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் கொரோனா நோய் பாதிப்பு - அதிகபட்சமாக ஈரோட்டில் 24 பேரை தாக்கியது
தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் 67 பேருக்கு கொரோனா நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 24 பேரை இந்த நோய் தாக்கியுள்ளது.
2. தமிழ்நாட்டில் 7 லட்சத்து 73 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன - மக்களவையில் டி.ஆர்.பாலு கேள்விக்கு மத்திய மந்திரி பதில்
நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 7 லட்சத்து 73 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக, மக்களவையில் டி.ஆர்.பாலு கேள்விக்கு மத்திய மந்திரி பதில் அளித்தார்.
3. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டலத்தின் ஜி.எஸ்.டி., கலால் வரி தலைமை கமிஷனராக ஜி.வி.கிருஷ்ணா ராவ் பொறுப்பு ஏற்பு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டலத்தின் ஜி.எஸ்.டி., கலால் வரி தலைமை கமிஷனராக ஜி.வி.கிருஷ்ணா ராவ் பொறுப்பேற்றார்.
4. தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்
தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்ற தடை விதிக்க வேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
5. தமிழ்நாட்டில் 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் - சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு குறித்து கபில் சிபல் கருத்து
தமிழ்நாட்டில் 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு குறித்து கபில் சிபல் கருத்து தெரிவித்துள்ளார்.