உலக செய்திகள்

ஜெர்மனியில் திருவிழா கூட்டத்துக்குள் காரை மோதி தாக்குதல்: 52 பேர் படுகாயம் + "||" + Car collision inside a car festival in Germany: 52 people injured

ஜெர்மனியில் திருவிழா கூட்டத்துக்குள் காரை மோதி தாக்குதல்: 52 பேர் படுகாயம்

ஜெர்மனியில் திருவிழா கூட்டத்துக்குள் காரை மோதி தாக்குதல்: 52 பேர் படுகாயம்
ஜெர்மனியில் திருவிழா கூட்டத்துக்குள் காரை மோதி நடத்தப்பட்ட தாக்குதலில் சிக்கி 52 பேர் படுகாயம் அடைந்தனர்.
பெர்லின்,

ஜெர்மனியின் வடக்கு பகுதியில் உள்ள வோல்க்மார்சன் நகரில் கிறிஸ்தவ பண்டிகையான ‘ரோஸ் திங்கள்’ தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் அங்கு பிரமாண்ட திருவிழா நடைபெற்றது. சிறுவர்கள், பெண்கள் உள்பட நூற்றுக்கணக்கான மக்கள் வித்தியாசமான வேடங்களிலும், வண்ணவண்ண உடைகளை அணிந்தும் ஆடிப்பாடி பேரணியாக சென்றனர். அப்போது உள்ளூர் நேரப்படி மதியம் 2.45 மணியளவில் அதிவேகத்தில் வந்த கார் ஒன்று, திருவிழா கூட்டத்துக்குள் புகுந்தது. இதில் மக்கள் அங்கும் இங்குமாக தூக்கி வீசப்பட்டனர். இதில் 18 சிறுவர்கள் உள்பட 52 பேர் பலத்த காயம் அடைந்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், கார் டிரைவரை மடக்கிப்பிடித்தனர்.


விசாரணையில், 29 வயதான அந்த கார் டிரைவர் மக்களை கொல்ல வேண்டும் என்ற நோக்கில் வேண்டுமென்றே கூட்டத்தினர் மீது காரை மோதியது தெரியவந்தது.

இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார் தாக்குதலுக்கான பின்னணி குறித்து அவரிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ள 52 பேரில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. லண்டனில் கூட்டம் ஒன்றில் நடந்த மோதலில் 22 போலீசார் காயம். வாகனங்கள் சேதம்
லண்டனில் சட்ட விரோதமாக நடந்த நிகழ்ச்சியில் ஏற்பட்ட மோதலில் 22 போலீசார் காயமடைந்துள்ளனர். போலீசாரின் பல வாகனங்கள் சேதமடைந்துள்ளன.
2. ரஷியாவில் கோர விபத்து: 2 கார்கள் நேருக்கு நேர் மோதி தீப்பிடித்தன; 6 பேர் உடல் கருகி பலி
ரஷியாவில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதி தீப்பிடித்த விபத்தில் சிக்கி 6 பேர் உடல் கருகி பலியாயினர்.
3. ஜெர்மனியில் உள்ள அமெரிக்க படை வீரர்களை திரும்பப்பெற டிரம்ப் முடிவு
ஜெர்மனியில் உள்ள 9 ஆயிரம் அமெரிக்க படை வீரர்களை திரும்பப்பெற அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முடிவு எடுத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்
4. வேலூர் பழைய பஸ் நிலையத்தில் ஆட்டோ, கார், லாரி, கனரக வாகனங்கள் நுழைய தடை அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை
வேலூர் பழைய பஸ் நிலையத்தில் ஆட்டோ, கார் மற்றும் கனரக வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
5. கொரோனா விவகாரத்தில் மோதல்: உலக சுகாதார நிறுவன உறவை அமெரிக்கா துண்டித்தது
கொரோனா வைரஸ் விவகாரத்தில் உலக சுகாதார நிறுவனத்துடன் மோதல் ஏற்பட்ட நிலையில், அதனுடனான உறவை துண்டித்து விட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.