உலக செய்திகள்

அறிவியல் அதிசயம்: ஆக்சிஜன் இல்லாமல் உயிர்வாழ முடியும்? + "||" + Scientists Find The First-Ever Animal That Doesn't Need Oxygen to Survive

அறிவியல் அதிசயம்: ஆக்சிஜன் இல்லாமல் உயிர்வாழ முடியும்?

அறிவியல் அதிசயம்: ஆக்சிஜன் இல்லாமல் உயிர்வாழ முடியும்?
பூமியில் ஆக்சிஜனின்றி உயிர்வாழும் புதிய உயிரினத்தை கண்டுபிடித்துள்ளதாக இஸ்ரேல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜெருசலேம்,

இஸ்ரேல் நாட்டு விஞ்ஞானிகள், ஒரு புதிய உயிரினத்தை கண்டுபிடித்து உள்ளனர். அது, 10-க்கும் குறைவான செல்களைக் கொண்ட சிறிய உயிரி. ஜெல்லி மீன்கள், பவளப்பாறைகளின் குடும்பத்தைச் சேர்ந்தது ஆகும். அந்த உயிரிக்கு ‘‘கென்னிகுயா சால்மினிகோலா’’ என்று பெயரிடப்பட்டு இருக்கிறது. இதுவரை ஒரு செல் உயிரினமான பூஞ்சை, அமீபா போன்றவையே காற்று இல்லாமல் உயிர் வாழும் தகுதியை பெற்று இருந்தன. ஆனால் ஏறத்தாழ 10 செல்களைக் கொண்ட ‘‘‘கென்னிகுயா’’வும் ஆக்சிஜன் இல்லாமல் உயிர் வாழும் என்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.


இதுகுறித்து, இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் பல்கலைக்கழக விஞ்ஞானியும் பேராசிரியருமான ஹுகான் கூறும்போது, ‘‘‘பொதுவாக விலங்குகள் அனைத்தும் ஆக்சிஜனை பயன்படுத்தியே ஆற்றலை உருவாக்குகின்றன. அதற்கு ‘மைட்டோகாண்ட்ரியா’ மிகவும் முக்கியமானது. ‘மைட்டோகாண்ட்ரியா’ என்பது ஆக்சிஜனை உள்வாங்கி சக்தியாக மாற்றக்கூடிய தன்மையைக் கொண்டது. ஆனால் அது ‘‘கென்னிகுயாவில்’’ இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஆகையால் அவை எதை வைத்து ஆற்றலை உருவாக்குகின்றன என்பதும் அவை சுவாசிக்க வேறு ஏதேனும் வழிமுறை உள்ளனவா என்பதும் இன்னும் புரியாத புதிராகவே இருக்கிறது’’ என்றார்.

‘‘தற்போது மாறிவரும் பரிணாம ஆராய்ச்சியில் இந்த கண்டுபிடிப்பானது ஒரு முக்கிய பங்கு வகிக்கும். ஏனெனில், ஒரு செல் உயிரினங்கள் மட்டுமே ஆக்சிஜன் இல்லாமல் வாழலாம் என்ற நிலைமாறி தற்போது 10 செல்களை கொண்ட உயிரினங்களும் காற்று இல்லாமல் உயிர் வாழ முடியும் என்று நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. இதுவே மற்ற விலங்குகளுக்கும் பொருந்தும் வகையில் அவை ஆக்சிஜன் இல்லாமல் உயிர் வாழும் நிலை உருவாகலாம். இது விலங்கியல் ஆராய்ச்சி தொடர்பான அனுமானத்தை மாற்றி அமைக்கக் கூடும்’’ என்றும் அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. வினாடியில் 1000 எச்டி திரைப்படங்களை பதிவிறக்கம் செய்யும் இன்டர்நெட் வசதியை உருவாக்கிய ஆராய்ச்சியாளர்கள்
வினாடியில் ஆயிரம் எச்டி திரைப்படங்களை பதிவிறக்கம் செய்யும் வகையில் அதிவேக இன்டர்நெட் வசதியை ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி உள்ளனர்.
2. பூமியை போன்ற ஒரு பெரிய கிரகம் உருவாகி வருவதை வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்
பூமியிலிருந்து 520 ஒளி ஆண்டுகள் தொலைவில் பூமியை போன்ற ஒரு பெரிய கிரகம் உருவாகி வருவதை வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
3. பூமியின் காந்தப்புலம் பலவீனமடைந்து வருகிறது ; செயற்கைகோள்களுக்கு பாதிப்பு
பூமியின் காந்தப்புலம் 10 சதவீதம் பலவீனமடைந்து உள்ளது. இதனால் செயற்கைகோள்களுக்கு பாதிப்பு ஏற்படும் என கூறப்பட்டு உள்ளது.
4. உருகிய இரும்பு மழை பெய்யும் மிக சூடான கிரகம் கண்டு பிடிப்பு
பூமியிலிருந்து 640 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உருகிய இரும்பு மழை பெய்யும் மிக சூடான கிரகம் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.
5. மூளை அறுவை சிகிச்சையின் போது வயலின் வாசித்த பெண்
இசை திறன்கள் பாதிக்கப்படாமல் இருக்க மூளை அறுவை சிகிச்சை செய்யும்போது வயலின் வாசித்த பெண்.