உலக செய்திகள்

டெல்லி கலவரம் எதிரொலி: பாகிஸ்தான் மக்களுக்கு இம்ரான்கான் எச்சரிக்கை + "||" + Imran Khan's warning to Pakistanis amid violence in India

டெல்லி கலவரம் எதிரொலி: பாகிஸ்தான் மக்களுக்கு இம்ரான்கான் எச்சரிக்கை

டெல்லி கலவரம் எதிரொலி: பாகிஸ்தான் மக்களுக்கு இம்ரான்கான் எச்சரிக்கை
டெல்லி கலவரம் எதிரொலியாக, பாகிஸ்தான் மக்களுக்கு இம்ரான்கான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்லாமாபாத்,

குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில் டெல்லியில் தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.

இந்த வன்முறை சம்பவங்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘வெறுப்பு அடிப்படையிலான இனவாத சித்தாந்தங்கள் தலைதூக்கினால், அது ரத்தம் சிந்துதலையே ஏற்படுத்தும். இந்தியாவில் 20 கோடி முஸ்லிம்கள் வன்முறைக்கு இலக்காக்கப்பட்டு இருக்கின்றனர்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.


மேலும் அவர், ‘பாகிஸ்தானில் நமது முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினரையோ அவர்களது வழிபாட்டு தலங்களையோ யாரும் தாக்கினால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கிறேன். நமது சிறுபான்மையினரும் சமமான குடிமக்களே’ என்றும் கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. டெல்லி கலவரம் குறித்த காட்சிகளை வெளியிட்டது டெல்லி போலீஸ்
டெல்லி கலவரம் குறித்த காட்சிகளை டெல்லி போலீஸ் வெளியிட்டுள்ளது.
2. டெல்லி கலவரம்: சமூக வலைத்தளங்கள் தொடர்ந்து கண்காணிப்பு - நாடாளுமன்றத்தில் மத்திய மந்திரி தகவல்
டெல்லி கலவரம் தொடர்பாக, சமூக வலைத்தளங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக, நாடாளுமன்றத்தில் மத்திய மந்திரி தகவல் தெரிவித்தார்.
3. டெல்லி கலவரம் குறித்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையில் புலனாய்வு குழு அமைக்க வேண்டும் - விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டத்தில் தீர்மானம்
டெல்லி கலவரம் குறித்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
4. டெல்லி கலவரம் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் - திருமாவளவன் வலியுறுத்தல்
டெல்லி கலவரம் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், நிருபர்களிடம் கூறியதாவது:-
5. டெல்லி கலவரத்துக்கு பொறுப்பேற்று அமித்ஷா ராஜினாமா செய்ய சோனியா காந்தி போர்க்கொடி
டெல்லி கலவரத்துக்கு பொறுப்பேற்று அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்று சோனியா காந்தி கூறியுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவாலையும் அவர் விமர்சித்தார்.