உலக செய்திகள்

ஜப்பானை சேர்ந்த உலகின் மிக வயதான மனிதர் மரணம் + "||" + Death of the world's oldest man from Japan

ஜப்பானை சேர்ந்த உலகின் மிக வயதான மனிதர் மரணம்

ஜப்பானை சேர்ந்த உலகின் மிக வயதான மனிதர் மரணம்
ஜப்பானை சேர்ந்த உலகின் மிக வயதான மனிதர் மரணமடைந்தார்.
டோக்கியோ,

உலகிலேயே மிக வயதான மனிதராக அறியப்பட்ட ஜப்பானை சேர்ந்த சிடேட்சு வடானபி உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். அவருக்கு வயது 112. ஜப்பானின் நீகாடா நகரில் 1907-ம் ஆண்டு மார்ச் மாதம் பிறந்த சிடேட்சு வடானபி தனது இளமை காலத்தை தைவானில் கழித்தார்.


அங்கு 18 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய அவர், திருமணத்துக்கு பின் ஜப்பான் திரும்பினார். ஜப்பானில் அரசு ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்ற அவருக்கு 5 பிள்ளைகள், 12 பேரன்கள், 16 கொள்ளு பேரன்கள் உள்ளனர்.

இவரை உலகில் வாழும் மிக அதிக வயதுடைய ஆணாக கடந்த 12-ந்தேதி கின்னஸ் புத்தகம் தேர்வு செய்து, சான்றிதழ் வழங்கியது. இதற்கு முன்னா் உலகின் மிக அதிக வயதுடைய ஆண் என்ற சாதனையை படைத்திருந்த மற்றொரு ஜப்பானியரான மசாசோ நோனாகா, கடந்த மாதம் இறந்ததை தொடா்ந்து, சிடேட்சு வடானபிக்கு இந்த பெருமை கிடைத்தது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக காய்ச்சல் மற்றும் மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டிருந்த சிடேட்சு, கடந்த ஞாயிற்றுக்கிழமை மரணமடைந்தார். இதனை ஜப்பானில் உள்ள கின்னஸ் அமைப்பு நேற்று முன்தினம் தெரிவித்தது.

‘யார் மீதும் கோபப்படாமல், புன்னகையுடன் இருப்பதுதான்’ தன்னுடைய நீண்ட ஆயுளுக்கான ரகசியம் என சிடேட்சு வடானபி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா வைரஸ் பாதிப்பு: ஒலிம்பிக் போட்டியை தள்ளி வைக்க முடிவு? - ஜப்பான் பிரதமர் சூசக தகவல்
ஒலிம்பிக் போட்டியை தள்ளிவைப்பதற்கான முடிவை எடுப்பது தவிர்க்க முடியாதது என்று ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார்.
2. ஜப்பானில் சரக்கு கப்பல், படகுடன் மோதியது - 13 சிப்பந்திகள் மாயம்
ஜப்பானில் சரக்கு கப்பல், படகுடன் மோதிய விபத்தில் சிக்கி 13 சிப்பந்திகள் மாயமாகினர்.
3. கொரோனா வைரஸ் பாதிப்பு: ஜப்பான் கப்பலில் இருந்த 119 இந்தியர்கள் நாடு திரும்பினர்
கொரோனா வைரஸ் பாதிப்பால் ஜப்பானில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கப்பலில் பயணித்த 119 இந்தியர்கள் நாடு திரும்பினர்.
4. ஜப்பான் கடலில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள சொகுசு கப்பலில் சிக்கி தவித்த அமெரிக்கர்கள் 300 பேர் தாயகம் திரும்பினர்
ஜப்பான் கடலில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள சொகுசு கப்பலில் சிக்கி தவித்த அமெரிக்கர்கள் 300 பேர் தாயகம் திரும்பினர். அங்கு அவர்கள் ராணுவ மையங்களில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
5. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் : ஜப்பானில் மன்னர் பிறந்த நாள் கொண்டாட்டம் ரத்து
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஜப்பானில் மன்னர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.