அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 5.8 புள்ளிகளாக பதிவு


அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 5.8 புள்ளிகளாக பதிவு
x
தினத்தந்தி 2 March 2020 10:41 PM GMT (Updated: 2 March 2020 10:41 PM GMT)

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் அமடினக் தீவுப் பகுதியில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 5.8 புள்ளிகளாக பதிவானது.

* அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் அமடினக் தீவுப் பகுதியில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.8 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை.

* பிரேசில் நாட்டின் அமபா மாகாணத்தில் இருந்து பாரா மாகாணத்துக்கு சென்ற சிறிய ரக பயணிகள் கப்பல் விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலியான நிலையில் 16 பேர் மாயமாகி இருந்தனர். இந்த நிலையில் மேலும் 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இதனால் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது.

* சிரியா மற்றும் லிபியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான ராஜதந்திர பணிகளை மீண்டும் செயல்படுத்துவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று முன்தினம் கையெழுத்தானது. முன்னதாக இரு நாடுகளும் எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றி இரு தரப்பினரும் விவாதித்தனர். குறிப்பாக சிரியா மற்றும் லிபியா பிரச்சினைகளில் துருக்கியின் ஈடுபாடு குறித்து விவாதிக்கப்பட்டது.

* தென்கிழக்கு ஆசியாவிலிருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள சரக்குக் கிடங்குக்கு கடந்த மாதம் விமானத்தில் வந்த சரக்குகளில் சுமார் ரூ.1,400 கோடி மதிப்புள்ள 400 கிலோ ‘மெதிலாம்பேட்டைமைன்’ (போதைப்பொருள்) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இதை அனுப்பியவர்களை கண்டறிவது தொடர்பான விசாரணை தொடங்கி உள்ளது.

Next Story