3 மாத இடைவெளிக்கு பிறகு வடகொரியா, மீண்டும் ஏவுகணைகள் சோதனை


3 மாத இடைவெளிக்கு பிறகு வடகொரியா, மீண்டும் ஏவுகணைகள் சோதனை
x
தினத்தந்தி 2 March 2020 10:55 PM GMT (Updated: 2 March 2020 10:55 PM GMT)

3 மாத இடைவெளிக்கு பிறகு வடகொரியா, மீண்டும் ஏவுகணைகள் சோதனை நடத்தி உள்ளது.

பியாங்யாங்,

வடகொரியா நேற்று 2 குறுகிய தூர பாலிஸ்டிக் ரக ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதித்து பார்த்தது. தெற்கு கடலோரத்தில் உள்ள வான்சன் பகுதியில் இருந்து கடலுக்கு மேலே இந்த ஏவுகணைகள் பறக்க விடப்பட்டன. சுமார் 240 கி.மீ. தூரம் அவை பாய்ந்து சென்றன.

வடகொரியா, அணுகுண்டு சோதனைகள் நடத்தியதற்காக, அந்த நாட்டின் மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடை விதித்தன. கடந்த ஆண்டு, வடகொரியா அடுத்தடுத்து பல்வேறு ஆயுத தளவாடங்கள் சோதனை நடத்தியது.

ஆனால், நவம்பர் மாதத்துக்கு பிறகு வடகொரியா சோதனை நடத்துவது இதுவே முதல்முறை ஆகும். அமெரிக்காவுடன் வடகொரியா நடத்தி வந்த பேச்சுவார்த்தை முடங்கியநிலையில், இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

Next Story