எகிப்து நாட்டில் முன்னாள் படை அதிகாரியை தூக்கில் போட்டனர் : தீர்ப்பு வந்த 2 நாளில் தண்டனை நிறைவேற்றம்


எகிப்து நாட்டில் முன்னாள் படை அதிகாரியை தூக்கில் போட்டனர் : தீர்ப்பு வந்த 2 நாளில் தண்டனை நிறைவேற்றம்
x
தினத்தந்தி 4 March 2020 11:49 PM GMT (Updated: 4 March 2020 11:49 PM GMT)

தீர்ப்பு வந்த 2 நாளில் எகிப்து நாட்டில் முன்னாள் படை அதிகாரிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

கெய்ரோ,

எகிப்து நாட்டில் சிறப்பு படையின் அதிகாரியாக இருந்து பயங்கரவாதியாக மாறியவர் அ‌‌ஷ்மாவி.

அங்கு அவர் போலீஸ் அதிகாரிகள் படுகொலை, பாதுகாப்பு அமைப்புகளை குண்டு வைத்து தகர்த்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களை செய்ததாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக அவர் மீதும், மேலும் 36 பேர் மீதும் கெய்ரோ கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அ‌‌ஷ்மாவிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது.

கடந்த திங்கட்கிழமை தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில், அ‌‌ஷ்மாவியை நேற்று காலையில் தூக்கில் போட்டு தண்டனையை நிறைவேற்றி விட்டனர். 2 நாளில் தண்டனை நிறைவேற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story