நிரவ் மோடி ஜாமீன் மனு 5-வது முறையாக நிராகரிப்பு


நிரவ் மோடி ஜாமீன் மனு 5-வது முறையாக நிராகரிப்பு
x
தினத்தந்தி 5 March 2020 4:22 PM GMT (Updated: 5 March 2020 4:22 PM GMT)

நிரவ் மோடியின் ஜாமீன் மனுவை 5வது முறையாக இங்கிலாந்து நீதிமன்றம் நிராகரித்தது.

லண்டன்,

குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று, மோசடி செய்துவிட்டு லண்டனுக்கு தப்பிச் சென்றார். இந்திய அரசின் வேண்டுகோளின்படி, லண்டன் காவல் துறையினர் நிரவ் மோடியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.  இதனிடையே நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்தும் நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. 

தற்போது லண்டனின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள வான்ட்ஸ்வொர்த் சிறைச்சாலையில், நீதிமன்றக்காவலில் அடைக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில் நிரவ் மோடியின் ஜாமீன் மனுக்கள் இதுவரை 4 முறை தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், 5வது முறையாக ஜாமீன் கேட்டு அவர் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீது இன்று நடந்த விசாரணையின் முடிவில் இங்கிலாந்து நீதிமன்றம் அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Next Story