உலக செய்திகள்

ஜனாதிபதி தேர்தலில் இருந்து புளும்பெர்க் விலகல் + "||" + Bloomberg's departure from the presidential election

ஜனாதிபதி தேர்தலில் இருந்து புளும்பெர்க் விலகல்

ஜனாதிபதி தேர்தலில் இருந்து புளும்பெர்க் விலகல்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகுவதாக மைக்கேல் புளும்பெர்க் அறிவித்துள்ளார்.
நியூயார்க், 

அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. இதில் போட்டியிடும் குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சியின் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கு மாகாணவாரியாக வாக்கெடுப்பு நடந்து வருகிறது.

ஜனநாயக கட்சி வேட்பாளருக்கான போட்டியில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடென், செனட்சபை எம்.பி. பெர்னி சாண்டர்ஸ் மற்றும் பிரபல தொழிலதிபரும், நியூயார்க் நகர முன்னாள் மேயருமான மைக்கேல் புளும்பெர்க் உள்ளிட்டோர் களத்தில் இருந்தனர். மாகாணவாரி ஓட்டெடுப்பில் ஜோ பிடென் மற்றும் பெர்னி சாண்டர்ஸ் ஆகிய 2 பேரும் தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில், இவர்கள் 2 பேரில் ஒருவர்தான் ஜனநயாக வேட்பாளராக தேர்வு செய்யப்படுவார் என்று நம்பப்படுகிறது.

இந்த நிலையில் ஜனநாயக கட்சி வேட்பாளருக்கான போட்டியில் இருந்து விலகுவதாக மைக்கேல் புளும்பெர்க் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், டிரம்பை தோற்கடிக்கவே தேர்தலில் போட்டியிட முடிவு செய்ததாகவும், அந்த காரணத்துக்காகவே தற்போது விலகும் முடிவை எடுத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஜனநாயக கட்சி வேட்பாளரை தேர்வு செய்யும் தேர்தலில் ஜோ பிடெனை ஆதரிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. காயம் காரணமாக ஐ.பி.எல். போட்டியில் இருந்து அமித் மிஸ்ரா, புவனேஷ்வர் குமார் விலகல்
காயம் காரணமாக ஐ.பி.எல். போட்டியில் இருந்து அமித் மிஸ்ரா, புவனேஷ்வர் குமார் விலகி உள்ளனர்.
3. பிரெஞ்ச் ஓபன்: ஆஷ்லி பார்ட்டி விலகல்
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து, ஆஷ்லி பார்ட்டி விலகினார்.
4. சினிமாவை விட்டு விலகல்: சஞ்சய்தத்தின் ரூ.735 கோடி படங்களின் கதி என்ன? - தவிப்பில் தயாரிப்பாளர்கள்
சினிமாவை விட்டு விலகும் முடிவால், சஞ்சய்தத்தின் ரூ.735 கோடி படங்களின் கதி என்ன என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது.
5. அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து விலகுவதாக ஸ்வெட்லனா குஸ்னெட்சோவா அறிவிப்பு
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து விலகுவதாக ஸ்வெட்லனா குஸ்னெட்சோவா அறிவித்துள்ளார்.